மாறா சராசரி செலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளாதாரத்தில் மாறா சராசரி செலவு (Average Fixed Cost) என்பது உற்பத்தியின் மாறா செலவை உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையால் வகுக்க கிடைப்பதாகும். இந்த மாறா செலவுகள் என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் அளவு எந்த அளவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவின் படியே நிர்ணயிக்கப்படும். மாறா சராசரி செலவு = சராசரி உற்பத்தி செலவு / உற்பத்தியின் அளவு. மாறா சராசரி செலவு என்பது சராசரி செலவின் ஒரு தொகுதிக்கான உற்பத்தி செலவாகும். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மாறா சராசரி செலவு குறையும் ஏனெனில், அதிக பொருட்கள் உற்பத்தி செய்யும் போதும், அதன் உற்பத்தி செலவு ஒரே அளவைக்கொண்டதாகவே இருக்கும். மாறுபடும் சராசரி செலவுடன், மாறா சராசரி செலவைக் கூட்டும் போது அப்பொருளின் உற்பத்திக்கான சராசரி மொத்த செலவு கிடைக்கும். ஆகவே, சராசரி மொத்த செலவு = சராசரி மாறுபடும் செலவு+சராசரி மாறா செலவு இவை இரண்டின் கூடுதலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறா_சராசரி_செலவு&oldid=2313140" இருந்து மீள்விக்கப்பட்டது