ஹிங்கோல் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிங்கோல் தேசியப் பூங்கா (Hingol National Park, உருது: ہنگول ) பாகிஸ்தானில் அமைந்துள்ளது.இது பாகிஸ்தானின் மிக்கப்பெரிய பூங்கா ஆகும். இப்பூங்காவானது 1,650 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 1988 ஆம் ஆண்டு இப்பூங்கா நிர்மாணிக்கப்பட்டது. ஹிங்கோல் தேசியப் பூங்கா தென்மேற்கு பாக்கிஸ்தான், தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் மாக்ரான் கரையோரமாக அமைந்துள்ளது. இது லாஸ்பெலா மாவட்டம், க்வாடர் மாவட்டம் மற்றும் அவரான் மாவட்டப் பிரிவுகளுக்குள் அமைந்துள்ளது. கராச்சி கடற்கரையில் தென்கிழக்கு சுமார் 190 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிங்கோல்_தேசியப்_பூங்கா&oldid=1674099" இலிருந்து மீள்விக்கப்பட்டது