ஷங்க்ரி-லா ஹோட்டல் - சிங்கப்பூர்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஷாங்க்ரி-லா ஹோட்டல் ஒரு ஐந்து நட்சத்திர மதிப்பு கொண்ட ஹோட்டல் ஆகும்.[1] இது சிங்கப்பூரின், ஆர்கார்ட் சாலையின், ஆரஞ்சு குரோவ் சாலையில் அமைந்துள்ளது. இதன் ஒரு கிளை இலங்கையிலும் உண்டு ஷங்கிரில்லா ஹோட்டல் கொழும்பு
இது ஏப்ரல் 23, 1971 இல் திறக்கப்பட்டது. இது ஷாங்க்ரி-லா ஹோட்டல்கள் குழுமத்தின் முதல் ஹோட்டல் ஆகும்.[2] ஷாங்க்ரி-லா ஹோட்டலில் 747 விருந்தினர் அறைகள் மற்றும் சூட்கள் உள்ளன. இந்த அறைகள் கோபுர சிறகு, பூங்கா சிறகு மற்றும் பள்ளத்தாக்கு சிறகு போன்ற மூன்று சிறகுகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.[3] 127 சேவை அடுக்குமாடி குடியிருப்புகளும், 55 விலை மதிப்புமிக்க காண்டோமினியம் அலகுகளும் இந்த ஹோட்டலின் கட்டமைப்பில் அடங்கும். சுமார் 15 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், உருவாக்கப்பட்டுள்ள பூங்கா ஹோட்டலுக்கு அதிகப்படியான அழகினை வழங்குகிறது. இந்த அழகினை உணவருந்தும் பகுதி மற்றும் பகுமுகக்கூடம் ஆகிய இடங்களில் உள்ள ஜன்னல் வழியே பார்த்து ரசிக்க இயலும். இதுபோல் அங்கிருந்து சிங்கப்பூரின் மற்ற தாவரவியல் பூங்காவினையும் பார்க்க இயலும்.[4] இந்த ஹோட்டல் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளது. டிரிப்அட்வைசரின் டிராவெல்லர்ஸ் தேர்வு 2012 இல், முதல் 25 சிங்கப்பூர் ஹோட்டல்களில் ஷாங்க்ரி-லா ஹோட்டல் இடம்பெற்றுள்ளது.
2002 ஆம் ஆண்டு முதல், 28 ஆசிய பசுபிக் மாநிலங்களின் பாதுகாப்பு அமைச்சர்கள், அமைச்சரவையின் நிரந்தர தலைவர்கள் மற்றும் இராணுவத்தின் தலைமை அதிகாரிகள் ஆகியோரின் வருடாந்திரக் கூட்டம் இந்த ஹோட்டலில் வைத்தே நடைபெறும்.[5]
இருப்பிடம்
[தொகு]ஷாங்க்ரி-லா ஹோட்டல் டாங்கிளிங்க் ஷாப்பிங்க் மையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. தேசிய ஆர்க்கிட் பூங்கா மற்றும் சைன்னாடவுன் பாரம்பரிய மையம் ஆகியவை இதன் அருகே அமைந்த பிற முக்கிய இடங்கள். இத்துடன் சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா மற்றும் ஹாஜி பாதை போன்றவை இதனருகே அமைந்த பிற இடங்களாகும்.
ஷாங்க்ரி-லா ஹோட்டல் - சிங்கப்பூர் வசதிகள்
[தொகு]அடிப்படை வசதிகள்
[தொகு]கம்பியில்லா இணையச் சேவை, குளிரூட்டப்பட்ட அறை, உணவகம், பார், காஃபி, அறைச் சேவை, இணையம், வணிக மையம் மற்றும் நீச்சல் குளம் போன்றவை இங்கு அளிக்கப்படும் அடிப்படை வசதிகள் ஆகும்.[6]
ஹோட்டல் வசதிகள்
[தொகு]குளிரூட்டப்பட்ட அறை, உயர்தூக்கி, விரைவாக உள்நுழைதல் மற்றும் விரைவாக வெளியேறுதல், மற்றும் விருந்தளிக்கும் வசதி போன்றவை இங்கு அளிக்கப்படும் வசதிகள் ஆகும்.
கோபுர சிறகு
[தொகு]இது 1971 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதுவே ஹோட்டலின் முதன்மைப் பகுதியாகும். இங்கு டீலக்ஸ் அறைகள், எக்ஸ்கியூட்டிவ் அறைகள், ஹாரிசன் கிளப் அறைகள் மற்றும் ஹாரிசன் பிரிமியர் சூட் ஆகியவை உள்ளன. அறைகள் மற்றும் சூட்கள் தவிர வெளிப்புற உணவகங்களும் கோபுர சிறகுப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
பூங்கா சிறகு
[தொகு]இது 1978 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்த பூங்கா சிறகின் மூலம் நகரின் வெப்பமண்டல விளைவுகள் சிறிது குறையும். இதில் டீலக்ஸ் அறைகள், மூலை பிரிமியர் அறைகள், ஒன்று மற்றும் இரண்டு படுக்கை அறை கொண்ட சூட்கள். இவை தவிர ரிசேர்ட் மாதிரியான அறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 15 ஏக்கரில் 110 விதமான செடிகள், பூக்கள் மற்றும் மரங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றுடன் அருவி போன்று விழும் நீர்வீழ்ச்சி மற்றும் கோய் குளம் ஆகியவையும் இணைந்துள்ளன. நீர்வீழ்ச்சி காஃபே எனும் உணவகமும் அமைந்துள்ளது. இதன் மூலம் வெளிப்புறம் அமைந்துள்ள நீச்சல் குளத்திற்கு அருகே விருந்தினர்கள் அமர்ந்து உண்ண முடியும்.
2011 ஆம் ஆண்டில், பூங்கா சிறகு புதுப்பிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டது. புதுப்பிப்பு வேலைகள் முடிக்கப்பட்டு மே 31, 2012 ஆம் ஆண்டில் ஹோட்டலின் பூங்கா சிறகு பகுதி மீண்டும் திறக்கப்பட்டது.[7] இந்த புதுப்பிப்பு வேலைகள் சுமார் 8 மாத காலம் நடைபெற்றது. இதற்கு சுமார் 66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது.
பள்ளத்தாக்கு சிறகு
[தொகு]இது 1985 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது விலைமதிப்புமிக்க இடங்களை விரும்பும் பயணிகளுக்கு மிகவும் உகந்த பகுதியாக அமைந்துள்ளது. இங்கு, டீலக்ஸ் அறைகள், ஒரு படுக்கை சூட்கள், டீலக்ஸ் சூட்கள், இரு படுக்கை சூட்கள் மற்றும் ஷங்க்ரி-லா ஜனாதிபதி சூட் ஆகியவை உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Shangri-La Hotel". Tripadvisor. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ Shangri-La Hotel, Singapore - Fast Facts "Shangri-La Hotel". shangri-la.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Shangri-La Hotel Singapore Rooms". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ http://www.fodors.com/world/asia/singapore/review-33511.html
- ↑ "About Shangri-La Dialogue". Archived from the original on 2010-06-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ Shangri-La Hotel, Singapore - Rooms
- ↑ Shangri-La Hotel, Singapore – Garden Wing.