உள்ளடக்கத்துக்குச் செல்

வேற்றுமை மயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேற்றுமை மயக்கம் என்பது உருபு மயக்கம்.

பெயர்ச்சொல் இடம் மாறுவதை வேற்றுமை என்கிறோம். வேற்றுமையை உணர்த்த ‘வேற்றுமை உருபுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. இந்த உருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் பொருந்தி வரும். இது ‘பின்னொட்டு’.

(ஆங்கிலத்தில் வேற்றுமை உருபு முன்னொட்டாகவும் at the door பின்னொட்டாகவும் Ram’s father உள்ளொட்டாகவும் his pen தொகையாகவும் call him வரும். தமிழில் முன்னொட்டாவோ, உள்ளொட்டாகவோ வருவதில்லை.)

சொல் வகையில் வேற்றுமை உருபுகளை ‘இடைச்சொல்’ என்கிறோம்.

சில வேற்றுமை உருபுகள் தமக்கு உரிய பொருளை உணர்த்தாமல் வேறொரு வேற்றுமைக்கு உரிய பொருளை உணர்த்துவது உண்டு. இதனை வேற்றுமை மயக்கம் என்கிறோம். இதனை நன்னூல் எளிமையாத் தெளிவுபடுத்துகிறது.

யாதன் உருபிற் கூறிற்று ஆயினும்
பொருள் செல் மருங்கில் வேற்றுமை சாரும் [1]
வேற்றுமை உருபு மயக்கம்
2 – 4 அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் [2] அழுக்காறு உடையானுக்கு
2 – 7 அரசனைச் சார்ந்தான் அரசன்கண் (அரசனிடம்)
3 - 5 வாணிகத்தான் ஆயினான் வாணிகத்தின் ஆயினான்

இவற்றையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நன்னூல் 317
  2. திருக்குறள் 167
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேற்றுமை_மயக்கம்&oldid=1151365" இலிருந்து மீள்விக்கப்பட்டது