விருபா இணையத்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருபா என்பது தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் வலைத்தளமாகும். இத்தளம் புத்தகங்களின் விவரம், பதிப்பகங்களின் தொடர்பு விவரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திரட்டித் தருகிறது. நூல்கள் பிரிவுகளாகவும் தொகுக்கப்படுகிறது. குறித்த புத்தகங்களுக்கு ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் இத்தளத்தில் பார்வையிடலாம். சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.[1]

இத்தகவல்கள் தவிர நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும் இத்தளம் தருகிறது. விருபா தளத்தின் நிறுவனர் கணினி வல்லுநர் து. குமரேசன்.

விருபா செயலி[தொகு]

இத்தளத்துக்காக உருவாக்கப்பட்ட விருபா வளர் தமிழ் செயலியானது இத்தகைய ஏனைய தளங்களுக்கும் பயன்படுத்தக் கூடியதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விருபா_இணையத்தளம்&oldid=3941582" இலிருந்து மீள்விக்கப்பட்டது