வினைலிடின் வினைக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினைலிடின்கள் ( vinylidenes) என்பவை கரிம வேதியியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வேதி வினைக்குழுக்களில் இதுவும் ஒன்றாகும். C=CH2. என்ற வேதி வினைக்குழு இடம்பெற்றுள்ள சேர்மங்கள் வினைலிடின்கள் எனப்படுகின்றன. 1,1 டைகுளோரோயெத்தின் (CCl2=CH2) பொதுவாகக் காணப்படும் வினைலிடின் குளோரைடுக்கு ஒரு உதாரணமாகும். வினைலிடின் குளோரைடும் வினைலிடின் புளோரைடும் பலபடிகள் தயாரிப்பில் முன்னோடிச் சேர்மங்களாக முக்கியத்துவம் பெறுகின்றன. வினைலிடின் குளோரைடையும் வினைலிடின் புளோரைடையும் பாலிவினைலிடின் குளோரைடு, பாலிவினைலிடின் புளோரைடு என்ற நேரியல் பலபடிகளாக மாற்றமுடியும். இப்பலபடியாதல் வினையை இவ்வாறு எழுதலாம்.

n CH2=CX2 → (CH2−CX2)n

ஒருபடியும் பலபடிகளும்[தொகு]

வினைலின் ஒருமங்களில் இருந்து உருவாக்கப்படும் வினைலிடின் பலபடிகள் அவற்றின் சமபகுதியன்களாக உள்ளன. இவ்வாறே வினைலின் புளோரைடிலிருந்து உருவாக்கப்படும் வினைலிடின் புளோரைடுகள் அவற்றின் சமபகுதியன்களாக உள்ளன.

வினைலிடின் அணைவுச்சேர்மங்கள்[தொகு]

வினைலிடின்கள் மாறும்நிலை கொண்ட இனங்கள் என்றாலும், கரிம வேதியியலில் இவை ஈந்தணைவிகளாகவும் காணப்படுகின்றன. உலோக அசிட்டிலைடுகள் புரோட்டானேற்றம் செய்யப்பட்டு அல்லது உலோக மின்னணு கவரிகள் விளிம்புநிலை ஆல்க்கைன்களுடன் வினைபடுத்தப்பட்டோ அனைவுச் சேர்மங்கள் உருவாகின்றன. குளோரோ(சைக்ளோபென்டாடையீனைல்)பிசு(டிரைபீனைல்பாசுபீன்)ருத்தேனியம் போன்ற அனைவுச் சேர்மங்கள் உருவாகின்றன[1].

CpRu(PPh3)2Cl + RC2H + KPF6 → [CpRu(PPh3)2(=C=C(H)Ph]PF6 + KCl

வாயுநிலை வினைலிடின்கள்[தொகு]

ஈரினைதிறன் கார்பன் என்ற சிறப்புக்கூறு காரனமாக கரிம வேதியியலில் வினைலிடின்கள் மாறுபட்ட சேர்மங்களாக கருதப்படுகின்றன. திண்மநிலையிலும் நீர்மநிலையிலும் இவை நிலைப்புத்தன்மை அற்றவையாகக் கருதப்பட்டாலும் நிலைப்புத்தன்மை கொண்ட நீர்த்த வாயுக்களாக இவற்றை உருவாக்க முடியும். C=CH2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட மெத்திலிடின்கார்பீன் இத்தொடர் வரிசையின் தாய் சேர்மமாகும்.

ஐயுபிஏசி பெயரிடும் முறை[தொகு]

ஐயுபிஏசி பெயரிடும் முறையில் 1,1-எத்தின்டையில் >C=CH2 இணைப்பை விவரிக்கிறது. இதனோடு தொடர்புடைய எத்தினைலிடின்கள் =C=CH2 இணைப்பை விவரிக்கிறது[2] .

மேற்கோள்கள்[தொகு]

  1. Barry M. Trost; Andrew McClory "Metal Vinylidenes as Catalytic Species in Organic Reactions" Chem Asian J. 2008, volume 3, 164–194. doi:10.1002/asia.200700247
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "vinylidenes". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைலிடின்_வினைக்குழு&oldid=2748206" இலிருந்து மீள்விக்கப்பட்டது