வினைதீர்த்த புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் ஒன்றியம் செல்லப்பம் பட்டி கிராமத்தில் வினைதீர்த்தபுரம் ஊர் உள்ளது. இந்த ஊர் வினைதீர்த்த உடையார் என்பவரால் 1930களில் உருவாக்கப்பட்டது. அவர் இப்பகுதியில் இருந்த புதன் கிழமைகளில் கூடும் சந்தையை மிகப்பெரிய சந்தையாக ஊர்மக்களின் மற்றும் பெரியவர்களின் உதவியோடு உருவாக்கினார். சுற்றியுள்ள ஊர் தலைவர்களுடன் இணைந்து ஒரு கூட்டுறவை ஏற்படுத்திப் பணம் சேர்த்து நிலங்களை வாங்கி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளை ஏற்படுத்தினார். ஊர்த் தலைவர்களுடன் இணைந்து விநாயகர் ஆலயத்திற்கு நிலத்தினை வாங்கி ஆலயத்தினைக் கட்டினார். வினைதீர்த்த உடையார் மகன் ராமசாமி உடையார் அரசு ஆரம்பப் பள்ளி அமைக்க தனது நிலத்தைத் தானமாக தனது தந்தை வினைதீர்த்த உடையார் நினைவாக அரசுக்கு தந்தார். இத்தரும காரியங்களினால் இவ்வூர் வினைதீர்த்த புரம் என்று அரசினால் 1950களில் பெயரிடப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினைதீர்த்த_புரம்&oldid=3528320" இலிருந்து மீள்விக்கப்பட்டது