விந்துச் சுரப்பி
விந்துச் சுரப்பி ஆணுக்குரிய இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய பகுதி ஆகும். மனிதனிற்கு இரண்டு விந்துச் சுரப்பிகள் உண்டு. இவற்றை முதல்நிலை இனப்பெருக்க உறுப்புகள் என்று கூறலாம். இவை விரைபையுனுள் ஓர் சிறப்புத் திசுவால் நிறுத்தப்பட்டுள்ளன. விந்துச் செல்கள் வெப்பம் உணர் தன்மையுடையவை. இவற்றின் வளர்ச்சி உடல் வெப்பத்தில் பாதிப்படையலாம். எனவே இவையும் விந்து நாளத்திரளும் உடலுக்கு வெளியே விரைப்பையில்லுள்ளன . இங்கு வெப்பம் குறைவு. இடது விந்துச் சுரப்பி 1 செ. மீட்டர் இறங்கியிருக்கும். இச்சுரப்பி 4-5 செ.மீட்டர் நீளமும் , 2-5 செ.மீட்டர் அகலமும் உடையது. இதன் எடை 10.5 - கிராம் ஆகும். விந்துச் சுரப்பியின் வெளிப்புறத்தில் டியூநிக்க அல்பு ஜினியா எனும் வெண்மை நிற உரையுள்ளது. உட்புறமாகச் சுரப்பியினுள் பல முழுமையற்ற இடைசுவர்கள் உள்ளன. இச்சுவர்கள் விந்துச் சுரப்பியின் - சிறு கதுப்புகலாகப் பிரிக்கின்றன. இவற்றினுள் விந்தாக்க நுன்குலல்களும் இடைஈட்டுச் செல்கள் அல்லது லீடிக் செல்களும் உள்ளன. விந்துச் செல்கள் நுன்குலல்கலினுள் தோன்றும்.