விடியும் வரை பேசு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விடியும் வரை பேசு | |
---|---|
இயக்கம் | ஏ. பி. முகன் |
கதை | ஏ. பி. முகன் |
நடிப்பு | அனித், நன்மா |
வெளியீடு | அக்டோபர் 20, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடியும் வரை பேசு அக்டோபர் 20, 2013ல் வெளிவந்த இந்தியத் தமிழ் திரைப்படம். இதனை ஏ. பி. முகன் இயக்கினார்.
கதை சுருக்கம்
[தொகு]கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.
காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.
இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.
இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.