வள்ளி (தொய்யில்)
மேனியில் எழுதிய வள்ளிக்கொடியைத் தொய்யில் என்பர்.
இக்காலத்தில் மகளிர் கைகளிலும் கால்களிலும் மருதாணிக் குழம்பால் எழுதப்பட்டும் கலைக்கொடி போன்றது அக்காலத்தில் மகளிர் மார்பில் எழுதப்பட்ட தொய்யில்.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் மனைவியின் தோள்களில் வெண்ணிறத்தில் வள்ளிக்கொடி எழுதப்பட்டிருந்தது. [1]
முதன்முதலாக அழகன் அழகியைத் தொலைவில் பார்க்கும்போது அவன் அணங்குத் தெய்வமோ என ஐயுறுவானாம்.
பின்னர் உற்றுநோக்கிச் சில அடையாளங்களால் இவள் பெண்ணே எனத் தெளிவு பெறுவானாம்.
அந்தத் தெளிவைத் தரும் அடையாளங்கள் பலவற்றுள் வள்ளி என்பதும் ஒன்று.
இந்த வள்ளி என்பது முலையிலும் தோளிலும் எழுதிய கொடி.
(பிற வண்டு மொய்த்தல், இழைக்கப்பட்ட செயற்கை அணிகலன்கள் அணிந்திருத்தல், பூ அணிந்திருத்தல். கண்ணில் நிழலாடல், அலமரும் தடுமாற்றம், கண் படபடத்தல் முதலானவை) [2]
காண்க: வள்ளி