வணிக ஊழியர்களின் ஜெர்மன் தேசிய சங்கம்
வணிக ஊழியர்களின் ஜெர்மன் தேசிய சங்கம் (German National Association of Commercial Employees, (செருமன்: Deutschnationaler Handlungsgehilfen-Verband, DHV) ஜெர்மனியின் தேசியவாதிகள் மற்றும் யூத-எதிர்ப்பு தொழிற்சங்கம் ஆகும். 1893 ஆம் ஆண்டில் செருமனியில் ஆரம்பிக்கப்பட்டது. இது செருமனிய சோசலிசக் கட்சியுடனும், பான்-செருமன் முன்ன்ணியுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது.[1]
இது சமூக ஜனநாயகத்திற்கு எதிரானது,[2] சனநாயக விரோத மற்றும் தாராளவாத சித்தாந்தத்தை கொண்டிருந்தது, மேலும் ஒரு பழமைவாத புரட்சி என்ற கருத்தை ஆதரித்தது.[3] இது வணிக வர்க்கத்தின் நலன்களை ஊக்குவித்தது. சமூக ஜனநாயக எண்ணங்கள் பரவப்படுவதை தடுக்க, அது நாட்டுப்பற்று மற்றும் வோல்கிசிக் மனோபாவத்தை பரப்பியது.[4] இது ஒரு புரோட்டோ பாசிசவாதி அல்லது முன் பாசிச இயக்கமாகக் கருதப்படுகிறது.[5] இது 1893 மற்றும் 1933 க்கு இடையில் இருந்தது.[6]
1914 ஆம் ஆண்டு வாக்கில் அது 160,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது, 1932 வாக்கில் இது 400,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அது நாட்சிக் கட்சியுடன் ஒத்துழைத்து நாசிசம் மற்றும் அரசியல் கத்தோலிக்கத்தை ஒன்றிணைக்க முயன்றது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Patch, William L. (1985). Christian Trade Unions in the Weimar republic 19-18-1933: The Failure of "Corporate Pluralism". new Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300033281. பார்க்கப்பட்ட நாள் 2 February 2018.
- ↑ Joan Campbell. European labor unions. Wesport, Connecticut, USA: Greenwood Press, 1992. pp. 163–164.
- ↑ Larry Eugene Jones, James N. Retallack. Between Reform, Reaction, And Resistance: Studies in the History of German Conservatism from 1789 to 1945. Berg, 1993, p. 20.
- ↑ Matthew Lange. Antisemitic anticapitalism in German culture from 1850-1933. University of Wisconsin-Madison, 2006, p. 224.
- ↑ Peter Davies, Derek Lynch. The Routledge companion to fascism and the far right. London, England; New York, New York, USA: Routledge, p. 4.
- ↑ Matthew Lange. Antisemitic anticapitalism in German culture from 1850-1933. University of Wisconsin-Madison, 2006. pp. 224.
- ↑ Joan Campbell. European labor unions. Wesport, Connecticut, USA: Greenwood Press, 1992. pp. 163–164.