வங்காளதேசத்தில் தெருவோரக் குழந்தைகள்
வங்காளதேசத்தில் தெருவோரக் குழந்தைகள் (Street children in Bangladesh) என்ற சொல் பாதுகாப்பு, கவனிப்பு மற்றும் வழிகாட்டலுக்குப் பொறுப்பான பெரியோர்கள்[1] யாருமில்லாமல், தெருவோரங்களை வாழும் இடமாகவும், வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ள குழந்தைகளைக் குறிக்கிறது. ஆக்ரமிக்கப்படாத குடியிருப்பு மனைகள், தரிசு நிலங்கள் முதலிய பகுதிகளும் தெருவோரம் என்ற சொல்லுக்குள் அடங்கியுள்ளன.
வரையறைகள்
[தொகு]தெருவோரக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதில்லை. அதற்குப் பதிலாக, தெருக்களில் பொருட்களை விற்பனை செய்வது அல்லது வேறு சிறுசிறு வேலைகள் செய்து பொருள் ஈட்டுகின்றனர். தமது தேவைகளை தாமே நிறைவேற்றிக் கொள்கின்றனர். பெற்றோர்களுக்கு கிடைக்கும் குறைவான வருமானமும், வேலையே கிடைக்காமல் அல்லது வேலைக்கே போகாமல் வாழ்கின்ற குடும்பச் சூழலும் இத்தகைய தெருவோரக் குழந்தைகளை உருவாக்குகின்றன. வங்காள தேசத்தில் மட்டும் 6,00,000 குழந்தைகளுக்கு மேல் தெருவோரக் குழந்தைகளாக வாழ்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 75 சதவீதக் குழதைகள் தலைநகர் டாக்காவில் வாழ்கின்றார்கள். ஒரு நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் மனித மேம்பாட்டு சுட்டெண் அட்டவணையில் 138 ஆவது இடத்தைப் வங்காளதேசம் பிடிக்கின்றது. இதன்படி 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர் என்பது அறியப்படுகிறது. உலகில் மக்கள் அடர்த்தி மிகுந்துள்ள இந்நாட்டுச் சமூகப்படிநிலையில் இக்குழந்தைகள் மிகவும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். தற்போதெல்லாம் வங்காளதேசத்தில் மக்கள்தொகை பெருகி வருவது போலவே தெருவோரக் குழந்தைகளின் தொகையும் நாளுக்குநாள் பெருகி வருகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி வங்காள தேசத்தில் 4 மில்லியன் தெருவோரக் குழந்தைகள்[2][3] இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பண்புகள்
[தொகு]எண்ணிக்கை
[தொகு]நாட்டிலுள்ள தெருவோரக் குழந்தைகளின் எண்ணிக்கைத் தொடர்பான அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. நாளுக்குநாள் அதிகரித்துவரும் இக்குழந்தைகளின் எண்ணிக்கையை அளவிடுதலும் இயலாத காரியமாக உள்ளது.
வயது
[தொகு]வங்காள நாட்டிலுள்ள தெருவோர குழந்தைகள் வயதை அறுதியிட்டுக் கூறமுடியாது. 6 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகள் சில பொருட்களை விற்கின்றனர். 13 முதல் 15 வரை உள்ள குழந்தைகள் வேறு சில வேலைகள் செய்கின்றனர். 5- வயதிற்கு குறைவான குழந்தைகள் கூட சில நேரங்களில் பொருட்களை விற்கவும் தெருக்களில் சுற்றித் திரியவும் செய்கின்றனர்.
பாலினம்
[தொகு]தெருவோரக் குழந்தைகளில் பெரும்பாலான பெண் குழந்தைகள் 10 வயது முதற்கொண்டே திருமண உறவுக்குத் தள்ளப்பட்டு பெருந்துன்பத்திற்கு ஆளாகின்றனர். சிறுவர்கள் கடினமான வேலைகளில் ஈடுபட்டு தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற உழைக்கின்றனர்.
விளைவுகள்
[தொகு]தெருவோரக் குழந்தைகள் தூங்குவதற்கும் இடமில்லாமல் எந்தவிதமான குறிப்பிட்ட வாழ்க்கை முறை இல்லாமல் அலைகின்றனர். அவர்கள் சில நேரங்களில் தெருக்களில் பூ விற்பனையில் ஈடுபடுவதைக் காணலாம்[4]
வங்காளதேசத்து தெருக்குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இளம் வயதிலேயே இறந்து விடுகின்றனர். முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாததே இதற்குக் காரணமாகும். கிட்டத்தட்ட 1,10,000 குழந்தைகள் ஆண்டுதோறும் தண்ணீரால் பரவும் நோய்களால் இறந்து போகின்றனர்[5]. சில சமயங்களில் பசியாலும், சுகாதரமான உணவு கிடைக்காததாலும், சத்துள்ள உணவை வாங்கும் திறனற்று இருப்பதாலும் இவர்கள் இறந்து போகின்றனர்.
தெருவோரக் குழந்தைகளுக்கான தொண்டுநிறுவனங்கள்
[தொகு]தெருக் குழந்தைகள் பெரும்பாலும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதால் அவர்கள் பணம் சம்பாதிக்க சரியான வழி கிடைப்பதில்லை. அரசு நிறுவனங்கள் சில நேரங்களில் அவர்களுக்கு உதவும். மிகப்பெரும்பாலும் அரசு சார்பற்ற யுனிசெப் போன்ற ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இக்குழந்தைகளுக்கு உதவி செய்கின்றன. ஒபிசாடிரிக் அறக்கட்டளை, யாக்கோ அறக்கட்டளை[http://www.odommobangladesh.org.bd/, மோயார் பள்ளி, சீப், புன்னகை, ஒரு டிகிரி முனைப்பு போன்ற பெயர்களைக் கொண்ட தனியார் தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது வங்கதேச தெருவோரக் குழந்தைகளுக்காக உதவி வருகின்றன[6][7] . சிலநிறுவனங்கள் இக்குழந்தைகளுக்கு உதவும் நோக்கில் மக்களை நாடிச் சென்று வேண்டுகோள்களை முன்வைக்கின்றன[8][9].
இன்சிடின் வங்காளதேசம் என்ற அமைப்பு குறிப்பாக பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளான தெருவோரக் குழந்தைகளுக்காகவும், சுரண்டலில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்காகவும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. வழக்கமான நடவடிக்கைகளுடன் சேர்ந்து, சர்வதேச தெரு குழந்தைகள் தினம் 2012 என்ற நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. 2011 ஆம் ஆண்டில் தெரு குழந்தைகள் கூட்டமைப்பு (மையங்கள்) அனைத்துலக தெருவோரக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடத் தொடங்கின. இவ்வமைப்பின் முன்னணி சர்வதேச வலைப்பின்னல்கள், உலகெங்கிலும் உள்ள தெருவோரக் குழந்தைகளின் உரிமைகளை உணர்ந்து அதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டன. தெருவோரக் குழந்தைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள், பிரபலங்கள், நிறுவனங்கள், மற்றும் தனிநபர்கள் உலகம் முழுவதும் தெருவோரக் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினர்[10]
கல்வி
[தொகு]வங்கதேசக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கின்றன. இதன் விளைவாக அவர்களுக்கு முறையான கல்வியறிவு கிடைப்பதில்லை. எஞ்சியிருக்கும் வாழ்க்கை முழுவதும் துன்பத்திலேயே கழிகிறது. அவர்களுக்கு கல்வி அளிப்பது மிகவும் முக்கியம் என்பது உணரப்பட்டு அரசு சாராத சில தொண்டு நிறுவனங்கள் இதற்காக முயன்று வருகின்றன[11][12].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Thomas de Benítez, Sarah (2007). "State of the world's street children". Consortium for Street Children. http://www.streetchildren.org.uk/content.asp?pageID=88. பார்த்த நாள்: February 20, 2012.
- ↑ Children in Bangladesh. "Street Children - Bangladesh".
- ↑ End Poverty in South Asia. "World Bank Blogs".
- ↑ "Street children in Bangladesh". That Knowledge. Archived from the original on 24 January 2013.
- ↑ "Ten Facts about Children in Bangladesh". Children of Bangladesh. Bangladesh Development Research Center (BDRC). Archived from the original on 2016-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ "Some Organizations that Help Children in Bangladesh". Children of Bangladesh. Bangladesh Development Research Center (BDRC). Archived from the original on 2019-03-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
- ↑ Celebrating Victory through Volunteerism 2013. "One Degree Initiative".
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Donate today to keep Global Voices strong!. "Global Voices".
- ↑ Study reveals inadequate access to EmONC facilities in 24 districts of Bangladesh. "icddr,b".
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Celebrating International Street Children Day 2012. "INCIDIN Bangladesh". Archived from the original on 2019-01-03. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ JAAGO Schools now powered by Bangladesh’s first ‘Online Classroom’!. "JAAGO Foundation".
- ↑ Bangladesh: Helping the street children of Dhaka. "Plan UK".