வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம், டாக்கா
வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம் | |
நிறுவப்பட்டது | 5 செப்டம்பர் 2004 |
---|---|
அமைவிடம் | பிச்சோய் சாரனி அவென்யூ, தேச்காவுன், டாக்கா, வங்காளதேசம் |
ஆள்கூற்று | 23°45′35.33″N 90°23′28.74″E / 23.7598139°N 90.3913167°E |
வலைத்தளம் | novotheatre |
வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம் (Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre) வங்காளதேசத்தின் டாக்கா நகரத்தில் உள்ள தேச்காவுன் பகுதியில் உள்ள பிச்சோய் சாரனி அவென்யூவில் அமைந்துள்ளது. [1] [2] இதுவொரு கோளரங்கமாகும்.
வரலாறு
[தொகு]வங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ கோள் அரங்கம் 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 அன்று பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. [3] முன்னதாக இதற்கு பசானி நோவோ அரங்கம் என்று பெயரிடப்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்க மசோதாவின் மூலமாக இதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.[4] இந்த விண்வெளி மையம் வங்காளதேச அரசின் அறிவியல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது.
விளக்கம்
[தொகு]5.46 ஏக்கர் நிலத்தில் இக்கோளரங்கம் கட்டப்பட்டுள்ளது. 21-மீட்டர் குவிமாடம் வடிவத்தில் 275 பேர் அமரும் அளவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் மக்கள் அமரும் வகையில் மூன்று மீட்டர் அளவில் சிறிய குவிமாடங்கள் அமைந்துள்ளன.
வடிவமைப்பு
[தொகு]கட்டிட்டக் கலைஞர் அலி இமாம் இக்கோளரங்கத்தை வடிவமைத்தார். கோளரங்கத்தின் குவிமாடம் பூமியையும் அதன் குளிர்ந்த நீல வானத்தையும் உருவகப்படுத்துகிறது. இந்த குவிமாடம் வடிவ அரங்கம் சமீபத்திய நவீன கருவிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் விண்வெளியை உணரும் வகையில் முப்பரிமாண சூழலில் ஒரு கிரக பயணத்தின் சிலிர்ப்பை அனுபவிக்கவும் உதவுகிறது. வளைந்த உச்சவரம்பு வானத்தை பிரதிபலிக்கிறது மற்றும் 120 டிகிரி கோணத்தில் ஒரு பெரிய திரை குவிமாடம் மீது கோள்களும் நட்சத்திரங்களும் நகர்வது போலவும் காட்டுகிறது.
சிறப்பம்சங்கள்
[தொகு]கோளரங்கம் மூன்று வகையான காட்சிகளைக் கொண்டுள்ளது. முடிவிலி பயணத்தில் எதார்த்தமாக கோள்கள், நட்சத்திரங்கள், பிற விண்வெளி பொருட்களின் மெய்நிகர் காட்சி போன்றவற்றுடன் வங்காளதேச சேக் முச்சிப்பூர் ரகுமானின் மார்ச்சு 7 விரிவுரை, கிராண்ட் கேன்யனில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வட அமெரிக்காவின் குடியேற்ற குலமான கரிகாத்து பற்றிய உரை போன்றவை இங்கு வழங்கப்படுகின்றன. விவரிக்கிறது.
நிகழ்ச்சியைப் பார்க்க பார்வையாளர்கள் குவிமாடத்தில் பார்க்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக பார்வையாளர்கள் தங்களைச் சுற்றி 150 படவீழ்த்திகளால் காட்சிப்படுத்தப்படும் வான்வெளியை நேரடியாகப் பார்ப்பது போல் உணர்கிறார்கள். கோளரங்கம் முப்பரிமாண காட்சி அனுபவத்தை வழங்கும் நவீன வசதியையும் கொண்டுள்ளது. [5] 2013 ஆம் ஆண்டு கோளரங்கத்தில் ஓர் அணுசக்தி தொழில்துறை தகவல் மையம் சேர்க்கப்பட்டது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Science festival begins in Dhaka today" (in en). The Daily Star. 2017-09-25. http://www.thedailystar.net/business/science-festival-begins-dhaka-today-1467220.
- ↑ "Annisul Huq pledges 'Clean Dhaka, Green Dhaka' within four years" (in en). The Daily Star. 2015-10-18. http://www.thedailystar.net/city/annisul-huq-pledges-clean-dhaka-green-dhaka-within-four-years-158935.
- ↑ "A day in the night sky" (in en). The Daily Star. 2013-11-26. http://www.thedailystar.net/news/a-day-in-the-night-sky.
- ↑ "JS passes Novo Theatre Bill, High-Tech Park Authority Bill" (in en). The Daily Star. 2010-03-02. http://www.thedailystar.net/news-detail-128357.
- ↑ "Novo theatre gets two 3D films" (in en). The Daily Star. 2012-11-07. http://www.thedailystar.net/news-detail-256567.
- ↑ "Nuclear Industry Information Centre opened in city" (in en). Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 2017-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170927113322/http://archive.dhakatribune.com/bangladesh/2013/oct/02/nuclear-industry-information-centre-opened-city.
வெளி இணைப்புகள்
[தொகு]பங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
- முகநூலில் பங்கபந்து சேக் முச்சிப்பூர் ரகுமான் நோவோ அரங்கம்