உள்ளடக்கத்துக்குச் செல்

லைஃப் ஆஃப் எ கிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைஃப் ஆஃப் எ கிங்
Life of a King
இயக்கம்ஜேக் கோல்ட்பெர்கர்
தயாரிப்புடாடியானா கெல்லி
ஜிம் யங்
கதைஜேக் கோல்ட்பெர்கர்
டேவிட் ஸ்காட்
டான் வெட்செல்
இசைஎரிக் வி. அச்சிகின்
நடிப்புகியூபா குடிங் ஜூனியர்.
டென்னிஸ் ஹேஸ்பெர்ட்
லிசாகே ஹாமில்டன்
ஒளிப்பதிவுமார்க் ஸ்வார்ட்ஸ்பார்ட்
படத்தொகுப்புஜூலி கார்செஸ்
கலையகம்மில்லினியம் என்டர்டெயின்மென்ட்
வெளியீடுசூன் 22, 2013 (2013-06-22)(லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழா)
சனவரி 17, 2014 (அமெரிக்கா)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$44,000(ww)[1]

லைஃப் ஆஃப் எ கிங் (Life of a King) என்பது ஜேக் கோல்ட்பெர்கர் இயக்கிய 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். இப் படத்தில் கியூபா குடிங் ஜூனியர், டென்னிஸ் ஹேஸ்பெர்ட், லிசாகே ஹாமில்டன் ஆகியோர் நடித்துள்ளனர் .

கதைச்சுருக்கம்

[தொகு]

இளமையில் செய்த ஒரு குற்றச் செயலுக்காக 20 ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டு 45 வயதில் வெளியே வருகிறார் யூஜின் (கியூபா குடிங் ஜூனியர்). சிறையில் இருந்து வந்தவர் என்பதால் வாழ்க்கை கடினமானதாக இருக்கிறது. பல சிரமங்களுக்கு இடையில் வாசிங்டன் சிடி உயர்நிலைப்பளியில் பாதுகாவலர் பணியில் சேர்கிறார். அங்கே பதின்மத்தின் இறுதியில் உள்ள மாணவர்கள் பலர் போதைப் பொருட்களை பாவித்தல், குற்ற உலகுடன் தொடர்பு கொள்ளுதல் என அவர்களின் எதிர்காலத்தை தொலைக்கும் நிலையில் உள்ளனர்.

சிறுவயதில் தன்னை யாரும் ஆற்றுப்படுத்தாத்தால் தன் வாழ்வு தலை கீழாக ஆனதைப்போல இவர்கள் வாழ்வும் ஆகக்கூடாது என எண்ணுகிறார். அந்த மாணவர்களை அதிலிருந்து மீட்க ஒரு திட்டம் வகுக்கிறார். ஒரு வாடகைக் கட்டடத்தில் சதுரங்க விளையாட்டு மையத்தை உருவாக்குகிறார். சிறையில் தான் கற்றுக் கொண்ட சதுரங்க நுட்பத்தை வழி மாறிப்போகும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். அதன் வழியாக அவர்களின் கவனத்தை திசைத் திருப்புகிறார். இவ்வாறு அவரிடம் பயிற்சி பெற்ற மாணவனான தஹிம் (மால்கம் மேஸ்) அமெரிக்க கிராண்டு மாஸ்டர் வாகையரில் கௌரவமான தோல்வியடைந்து பாராட்டுகளைப் பெறுகிறான்.

நடிகர்கள்

[தொகு]
  • யூஜினாக கியூபா குடிங் ஜூனியர்
  • செர்சியாக டென்னிஸ் ஹேஸ்பெர்ட்
  • ஷீலா கிங்காக லிசாகே ஹாமில்டன்
  • தஹிமாக மால்கம் மேஸ்
  • ரோண்டாவாக ஜெய்தா-இமான் பெஞ்சமின்
  • டேனியல் ரோஸ்
  • கெவின் ஹென்ட்ரிக்ஸ் வேர்க்கடலையாக [2]
  • ஜே. தாமஸ் கெய்ன்ஸாக பிளேக் கூப்பர் கிரிஃபின் [3]

வெளியீடு

[தொகு]

இந்தத் திரைப்படம் 2013 லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கான அமெரிக்க வெளியீட்டை 2014 சனவரி 17 அன்று மில்லினியம் என்டர்டெயின்மெண்ட் வெளியிட்டது. [4] [5]

வரவேற்பு

[தொகு]

லைஃப் ஆஃப் எ கிங் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. வாசிங்டன் போஸ்ட் இப்படத்திற்கு நான்கு நட்சத்திரங்களில் மூன்று நட்சத்திரங்களை வழங்கியது. விமர்சகர்களின் மதிப்புரைகளின் அடிப்படையில் 100க்கு 52 மதிப்பீட்டை மதிப்பாய்வு திரட்டல் இணையதளமான Metacritic வழங்கியது. [6]

குறிப்புகள்

[தொகு]
  1. "Life of a King (2014)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
  2. "Life of a King (2013)". IMDb. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
  3. "Blake Cooper Griffin". IMDb. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
  4. Bahr, Lindsey (December 10, 2013). "'Life of a King': Cuba Gooding Jr. teaches chess to troubled DC teens". Entertainment Weekly's EW.com. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
  5. Mike Fleming Jr. "Millennium Acquires U.S. On 'Life Of A King'". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
  6. "Life of a King". Metacritic. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லைஃப்_ஆஃப்_எ_கிங்&oldid=3640435" இலிருந்து மீள்விக்கப்பட்டது