உள்ளடக்கத்துக்குச் செல்

லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித லூயிஸ் மார்ட்டின்
பிறப்பு(1823-08-22)22 ஆகத்து 1823
இறப்பு29 சூலை 1894(1894-07-29) (அகவை 70)
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்19 அக்டோபர் 2008, புனித திரேசா பேராலயம், பிரான்சு by திருத்தந்தை 16-ம் பெனடிட்
புனிதர் பட்டம்18 அக்டோபர் 2015, புனித பீட்டர் சதுக்கம் by திருத்தந்தை பிரான்சிஸ்
திருவிழா12 சூலை
பாதுகாவல்குடும்பம், தந்தை
புனித மேரி செலின் குரின்
பிறப்பு(1831-12-23)23 திசம்பர் 1831
செயின்ட்-டெனிசு, பிரான்சு
இறப்பு28 ஆகத்து 1877(1877-08-28) (அகவை 45)
அலசோன், பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்19 அக்டோபர் 2008, புனித திரேசா பேராலயம், பிரான்சு by திருத்தந்தை 16-ம் பெனடிட்
புனிதர் பட்டம்18 அக்டோபர் 2015, புனித பீட்டர் சதுக்கம், வாட்டிகன் by திருத்தந்தை பிரான்சிஸ்
திருவிழா12 சூலை

லூயிசு மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் (Louis Martin and Marie-Azélie Guérin) என்பவர்கள் கத்தோலிக்க புனிதர்களாவர். இவர்கள் புனித குழந்தை இயேசுவின் திரேசாவின் பெற்றோர்களாவர். இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று அளிக்கப்பட்டது.[1][2]

குடும்ப வாழ்க்கை

[தொகு]

லூயிசு மார்ட்டின், சூலை 12, 1858-ல் மேரி செலின் குரினை(Marie-Azélie Guérin) மணந்தார். இவர்கள் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களில் நால்வர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர்.மீதமுள்ள ஐந்து குழந்தைகளும் பிற்காலத்தில் அருட்சகோதரிகளாக மாறினர். இந்த தம்பதியரின் கடைசி குழந்தையாக(ஒன்பதாவது) பிறந்தவர்தான் புனித குழந்தை இயேசுவின் திரேசாள்.[3] இவர்களின் குழந்தைகள்

  1. மேரி லூயிஸ் (22 பிப்ரவரி 1860 – 19 சனவரி 1940), அருட்சகோதரி, சகோதரி திருஇருதயத்தின் மேரி, லிசியே நகர கார்மல்சபை;
  2. மேரி பவுலின் (7 செப்டம்பர் 1861 – 28 சூலை 1951), அருட்சகோதரி, இயேசுவினுடைய ஆக்னஸ் அம்மா, லிசியே நகர கார்மல்சபை;
  3. மேரி லியோனி (3 சூன் 1863 – 16 சூன் 1941), அருட்சகோதரி, சகோதரி பிரான்கோஸி தெரஸ், Visitandine at Caen;
  4. மேரி கெலனி (3 அக்டோபர் 1864 – 22 பிப்ரவரி 1870);
  5. ஜோசப் லூயிஸ் (20 செப்டம்பர் 1866 – 14 பிப்ரவரி 1867);
  6. ஜோசப் ஜீன்-பேப்ஸ்ட் (19 டிசம்பர் 1867 – 24 ஆகஸ்ட் 1868);
  7. மேரி செலின் (28 ஏப்ரல் 1869 – 25 பிப்ரவரி 1959), அருட்சகோதரி, சகோதரி திருமுகத்தினுடைய ஜெனிவி, லிசியே நகர கார்மல்சபை;
  8. மேரி மெலனி தெரஸ் (16 ஆகஸ்ட் 1870 – 8 அக்டோபர் 1870);
  9. மேரி பிரான்கோஸி தெரஸ் (2 சனவரி 1873 – 30 செப்டம்பர் 1897), அருட்சகோதரி, அருட்சகோதரி குழந்தை இயேசுவின் திரேசா மற்றும் திருமுகத்தின் திரேசா, லிசியே நகர கார்மல்சபை, 1925-ல் புனிதர் பட்டம்.[4]

புனிதர்பட்டம்

[தொகு]

லூயிசு மார்ட்டின் மற்றும் அவரது மனைவி செலின் வணக்கத்துக்குரியவராக 26 மார்ச் 1994 அன்று, திருத்தந்தை இரண்டாம் ஜாண்பாலால் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு முக்திபேறுபட்டம் 19 அக்டோபர் 2008 அன்று திருத்தந்தை 16-ம் பெனடிடால் அளிக்கப்பட்டது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-25.
  2. புனிதர் பட்டம் குறித்து வத்திக்கான் வானொலியில்
  3. "The Story of soul" by St,Therese of lisieux
  4. O'Riordan, Maureen. "Storm of Glory: St. Therese of Lisieux from 1897–2014". Saint Therese of Lisieux: A Gateway. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.