லாசுக்கர் எதிர் பௌவர்
லாசுக்கர் எதிர் பௌவர் (Lasker versus Bauer) இடையிலான போட்டி 1889 ஆம் ஆண்டு ஆம்சுடர்டாமில் நடைபெற்றது. மிகவும் பிரபலமான ஆட்டங்களில் ஒன்றான இந்தப் போட்டியில் எதிரியின் ராசாவைச் சுற்றியுள்ள சிப்பாய் அரணை உடைக்க லாசுக்கர் தன்னுடைய இரண்டு மந்திரிகளையும் தியாகம் செய்து, ஆட்டத்தின் இறுதியில் போட்டியில் வெற்றி பெறுகிறார் [1]. இதேபோன்ற தியாக உத்தி அதன் பின்னர் பல போட்டி ஆட்டங்களில் எதிரொலித்தது. குறிப்பாக 1914 இல் செயிண்ட் பீட்டர்சுபெர்க்கில் நிம்சோவிட்ச்சு எதிர் தார்ரசு இடையிலான ஆட்டம், 1982 இல் லுசெர்னில் நடைபெற்ற மைல்சு எதிர் பிரௌனே ஆட்டம் மற்றும் 2003 இல் நடைபெற்ற போல்கார் எதிர் கார்போவ் ஆட்டம் போன்றவை சில உதாரணங்களாகும்.
பௌவருக்கு எதிரான இப்போட்டி லாசுக்கரின் சதுரங்க வாழ்க்கையின் தொடக்க காலத்தில் நிகழ்ந்தது. 1889 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்சுடெர்டாம் சதுரங்கப் போட்டியின் முதல் சுற்றில் இந்த ஆட்டம் நடைபெற்றது. அப்போட்டியில் லாசுக்கர் மிகச் சிறப்பாக 6/8 என்ற புள்ளிகளை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தைப் பிடித்த அமோசு பார்னைவிட இது ஒரு புள்ளி குறைவாகும். அக்காலத்தில் மிகச் சிறந்த சதுரங்க வீர்ர்க்களாகக் கருதப்பட்ட யேம்சு மேசன், இசிதோர் கன்சுபெர்க் ஆகியோரைக்காட்டிலும் இது அதிகமான புள்ளிகள் ஆகும். இவரிடம் தோற்ற பௌவர் போட்டியின் இறுதியில் 3.5/8 புள்ளிகள் மட்டுமே எடுத்தார். இக்குறிப்பிட்ட வகை தியாகம் செய்யும் உத்தி முன்னதாக 1884 இல் பர்ன் எதிர் ஓவென் ஆட்டத்திலும் நிகழ்ந்தது [2]. ஆனால் ஓவென் அத்தியாக உத்தியை சரியாகக் கையாளததால் தோல்வியடைய நேரிட்டது. இருந்தபோதிலும் லாசுக்கருக்கு இவ்வுத்தி ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது.
ஆட்டம்
[தொகு]வெள்ளை:இமானுவல் லாசுக்கர்
கருப்பு: யோகான் பௌவர்
திறப்பு: பறவையின் சதுரங்கத் திறப்பு இசிஓ ஏ03
1. f4 d5 2. e3 Nf6 3. b3 e6 4. Bb2 Be7 5. Bd3 b6 6. Nc3 Bb7 7. Nf3 Nbd7 8. 0-0 0-0 9. Ne2 c5 10. Ng3 Qc7 11. Ne5 Nxe5 12. Bxe5 Qc6 13.Qe2 a6?? 14. Nh5 Nxh5 (படம்)
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
13...a6 என்று கருப்பு நகர்த்தியது மிகப்பெரிய தவறு ஆகும். 13...g6 என்று விளையாடியிருந்தால் கருப்புக்கு சமநிலை ஆட்டம் அமைந்திருக்கும். பதிலாக இத்தவறான நகர்வு விளையாடப்பட்ட்தால் லாசுக்கருக்கு இந்த இரண்டு மந்திரி தியாக உத்தி தோன்றியது, இதனால் வெற்றி லாசுக்கரின் கைகளுக்கு எட்டும் வாய்ப்பு உருவாகிறது.
15. Bxh7+ Kxh7 16. Qxh5+ Kg8 17. Bxg7 Kxg7
இரண்டாவது தியாகத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கருப்புக்கு எந்த உபயோகமும் இல்லை.
ஒருவேளை தியாகத்தை ஏற்றுக் கொள்ளாமல் கருப்பு 17...f5 என்று நகர்த்தினால் வெள்ளை 18.Be5 Rf6 19.Rf3 பின்னர் Rg3 என வெற்றியை நோக்கி நகரும்.
17...f6 என்று கருப்பு நகர்த்தினாலும் வெள்ளை அடுத்ததாக 18.Bh6 என்று நகர்த்தி வெற்றிக்கு மிக மிக நெருக்கத்தில் இருக்கும்.
18. Qg4+ Kh7 19. Rf3
ராசாவைக் காப்பாற்ற கருப்பு ராணியை இழந்தே ஆகவேண்டும்.
19... e5 20. Rh3+ Qh6 21. Rxh6+ Kxh6 22. Qd7
வெள்ளையின் இந்த நகர்வு கருப்பு மந்திரிகள் இரண்டையும் ஒரே நேரத்தில் தாக்கும் இரட்டை தாக்குதல் ஆகும். ராணியை இழந்தாலும் கருப்பிடம் போதுமான அளவுக்கு காய்கள் இருக்கின்றன. ஆனால் லாசுக்கர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெற்றியை நோக்கி பயணிக்கிறார்.
22... Bf6 23. Qxb7 Kg7 24. Rf1 Rab8 25. Qd7 Rfd8 26. Qg4+ Kf8 27. fxe5 Bg7 28. e6 Rb7 29. Qg6 f6 30. Rxf6+ Bxf6 31. Qxf6+ Ke8 32. Qh8+ Ke7 33. Qg7+ Kxe6 34. Qxb7 Rd6 35. Qxa6 d4 36. exd4 cxd4 37. h4 d3 38. Qxd3 1–0
கருப்பு தோல்வியை ஒப்புக் கொண்டு ஆட்ட்த்தை கைவிடுகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lasker–Bauer, 1889 game at ChessGames.com
- ↑ Burn–Owen, 1884 game at ChessGames.com
.