ரெவரெண்ட் டாக்டர் கார்ல் கிரால்
Appearance
' மேதகு முனைவர் கார்ல் கிரால் இவர் 1838 ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் ஜெர்மனி நாட்டில் சேக்சனியில் உள்ள மீகெலன் எனும் இடத்தில் பிறந்தார். லீப்சிக் எனும் இடத்தில் கல்வி பயின்றார். 1870 இல் பாதிரியாராக அமர்த்தப்பட்டார்.
வருகை
[தொகு]1870 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.
தமிழ்ப் பணி
[தொகு]இவர் ஜெர்மன் மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். முழு திருக்குறளையும் மொழிபெயர்க்கும் முன் காலமானார். சிவஞான சித்தியார் எனும் நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.
பாராட்டு
[தொகு]போப் அவர்கள் இவர் மொழிபெயர்ப்பை பயனுடைய ஒன்று என்று பாராட்டியுள்ளமை குறிப்பிடற்குரியது.
இறப்பு
[தொகு]இவர் 1879 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் தரங்கம்பாடியில் உயிர்நீத்தார்.
பார்வை நூல்
[தொகு]ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம். சென்னைப் பல்கலைக்கழகம் -- 2௦03