ராதிகா பிரமல்
ராதிகா பிரமல் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
கல்வி | ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை |
பணி | நிர்வாக இயக்குநர்,விஐபி நிறுவனம் |
பெற்றோர் | திலீப் மற்றும் கீதா |
வாழ்க்கைத் துணை | அமென்டா |
ராதிகா பிரமல் இந்தியாவின் முதல்தர பயணப்பைகள் மற்றும் பெட்டிகள் நிறுவனமான விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராவார். முன்னதாக ராதிகா, 2010-2017 ஆண்டுகளில் விஐபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார், மேலும் அவர் 2000-2004 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளிலும் பணியாற்றியுள்ளார். வெளிப்படையாக தன்னை ஒரு தற்பாலிர்ப்பு கொண்ட பெண்ணாக வெளிப்படுத்திக்கொண்ட இந்தியாவின் வணிகத் தலைவர்களில் ராதிகா பிரமல் முதன்மையானவராவார். [1] [2]
பிராசெனோஸ் கல்லூரியில் தத்துவம் மற்றும் பொருளாதாரம் படிப்பில் இளங்கலை படிப்பை முடித்துள்ள ராதிகா, 2000 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியானார். 2006 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் வணிக பள்ளியில், முதுகலை வணிக மேலாண்மை படித்துள்ளார்.
திலீப் மற்றும் கீதா பிரமல் அவர்களின் மகளும், இந்தியாவின் பிரபலமான வணிகக்குடும்பங்களில் ஒன்றான விஐபி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமாக இருந்த ராதிகாவுக்கும் டென்னசியில் பிறந்த அமெரிக்கரான அமண்டாவுக்கும் லண்டனில் திருமணம் நடந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Layak, Suman (May 17, 2019). "How Radhika Piramal is Steering VIP Industries Towards Bigger and Global Roads". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் July 22, 2021.
- ↑ Ganguly, Dibyendu (June 23, 2017). "London calling for Radhika Piramal, Spouse". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் July 22, 2021.