உள்ளடக்கத்துக்குச் செல்

மெரீனோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரீனோ செம்மறி

மெரீனோ என்பது கம்பளிக்காக வளர்க்கப்படும் ஸ்பெயினைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற செம்மறி ஆட்டினமாகும்.[1][2][3]

விளக்கம்

[தொகு]

இந்த ஆடுகள் வெண்மையான முகமும், காதுகளும் கொண்டவையாகவும், கிடாக்கள் கொம்புகளோடும், பெட்டைகளை கொம்புகள் அற்றும் இருக்கும். இந்த ஆடுகளில் பெரும்பாலான ஆடுகளில் தலையும், கால்களும் ரோமத்தினால் மூடப்பட்டிருக்கும். வறண்ட மற்றும் மாறுபட்ட காலநிலைகளிலும் நன்கு வளரக்கூடிய திறன் கொண்டது. மற்ற இனங்களைக் காட்டிலும் இவ்வினப் பெட்டை ஆடுகள் அதிக காலம் வாழக்கூடியனவாகவும் உள்ளன.[4]

செம்மறிகள் யாவற்றினும் இதனுடைய முடியே மிகவும் மென்மையானது. இது பொதுவாக தடகள விளையாட்டு ஆடைகளின் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் முடி பின்வரும் தன்மைகளின் காரணமாக தடகள விளையாட்டு ஆடை தயாரிப்பில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றது.

  • உடல் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. வெதுவெதுப்பாக இருந்தாலும் இவை அணிபவரின் உடல் வெப்பநிலையை மிகவும் அதிகரிப்பதில்லை. மேலும் இவை வியர்வையை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன.
  • பருத்தியைப் போல ஈரத்தை உறிஞ்சிக் கொண்டாலும் ஈரமாக இருக்கையிலும் வெதுவெதுப்பாகவே இருக்கின்றது.
  • மற்ற கம்பளி வகைகளைப் போலவே மெரீனோவிலும் பாக்டீரியாவை எதிர்க்கும் திறன் கொண்ட லெனோலின் உள்ளது.
  • கிடைக்கும் கம்பளிகளில் மெரீனோவின் கம்பளியே மிகவும் மென்மையானது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Corominas, Joan; Pascual, José A., eds. (1989). "Merino". Diccionario Crítico Etimológico Castellano e Hispánico. Vol. IV. Madrid: Gredos. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-249-0066-9.
  2. Butzer K W (1988). "Cattle and Sheep from Old to New Spain: Historical Antecedents". Annals of the Association of American Geographers 78 (1): 29-56, at pages 39-40. doi:10.1111/j.1467-8306.1988.tb00190.x. 
  3. Braudel, F; translated Reynolds, S (1995). The Mediterranean and the Mediterranean World in the Age of Philip II: Volume I. Johns Hopkins University Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520203082.
  4. "மெரினோ". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 30 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரீனோ&oldid=4102324" இலிருந்து மீள்விக்கப்பட்டது