முன்றுறை அரையனார்
Appearance
முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர் கி.பி. 301 - 400 இடையில் வாழ்ந்த ஒரு சங்கத்தமிழ்ப் புலவராவார். இவர் இயற்றிய நூல் பழமொழி நானூறு. முன்றுறை அரையனார் என்பதை முன் + துறை (துறை இங்கு படித்துரையினைக் குறிக்கும்)[சான்று தேவை] + அரையனார் எனப்பொருள் கொள்ள வேண்டும்.
சமயம்
[தொகு]இவரது நூலின் தற்சிறப்பு பாயிரத்தின் மூலம் இவர் சமணத்தை சார்ந்தவர் என அறியப்படுகிறது.
- "பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்
- பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா
- முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான்
- இன்றுறை வெண்பா இவை." - (பழமொழி நானூறு - தற்சிறப்பு பாயிரம்[1])
செய்யுளின் பொருள்: அசோக மரத்து நிழலில் எழுந்தருளியிருக்கும் அருகக் கடவுளின் திருவடிகளைத் தொழுது, பழைய பழமொழிகள் நானூறும் தழுவி முன்றுறை மன்னர், இனிய பொருள்கள் அமைந்த நான்கடி வெண்பாக்களாகிய நூற்பாக்களின் மூலம் சுவைதோன்ற அமைத்தார்.
பிண்டியின் (அசோக மரத்து) நிழலில் வாழும் அருகப் பெருமானை வணங்குவதால் ஆசிரியர் சமண சமயத்தவர் என்பது தெளிவாகிறது.