உள்ளடக்கத்துக்குச் செல்

மின்காந்த சக்தி வாய்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்காந்த சத்தி வாய்கள்

மின்காந்த சக்தி வாய்கள் (Power Outlets or Sockets) மின்காந்த சக்தியை உபயோகத்துக்கு ஏற்றவாறு வழங்க பயன்படுகின்றது. பொதுவாக வீடுகளில் மும்முனை மின் வாய்கள் அல்லது இருமுனை மின் வாய்கள் இருக்கும்.[1][2][3]

மும்முனை வாய்கள்

[தொகு]
  1. மின்வழி வாய் (live or hot or red)
  2. மின்வெளி வாய் (neutral or cold or black)
  3. நில வாய் (earth or ground)

மின்வழி வாய்

[தொகு]

மின்வழி வாய் ஊடாக மின்னோட்டம் (மின்காந்த சக்தி) மின்சாதனங்கள் அல்லது மின்கருவிகளின் சுற்றுக்களுக்குள் வந்து மின்வெளி வாய் ஊடாக வெளியேறும். மின்னோட்டம் எப்பொழுதும் ஒரு மின்சுற்றிலேயே (பயணித்து கொண்டு) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்காவில் மின்வழிவாய் ஊடாக வரும் மின்காந்த சக்தி 120 Vots (rms) மின்னழுத்தையும், 60 Hz அலைஎண்ணையும் கொண்டிருக்கும். இந்தியா, இலங்கை, மற்றும் பல ஆசிய நாடுகளில் மின்ழுத்தம் 220 Volts (rms) ஆகவும், 50 Hz அலைஎண்ணாகவும் இருக்கும்.

மின்வெளி வாய்

[தொகு]

பொதுவாக மின்வெளி வாய் 0 Volts மின்னழுத்த செயற்றிறத்தை (electric potential) அல்லது நில வாய்க்கு ஒத்த செயற்றிறத்தை கொண்டிருக்கும். நிலவாய் நிலத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தொடர்பு, ஆகையால் 0 Volts மின்னழுத்த செயற்றிறத்தை கொண்டிருக்கும்.

நில வாய்

[தொகு]

நில வாய் முக்கிய நோக்கம் பயனர் பாதுகாப்பே. ஒரு மின்சாதன உலோக உறை பெட்டியில் தவறுகாரணமாக மின்னோட்டம் பரவகூடும், அச்சமயம் அப் பெட்டியை தொடும் பயனர் மின் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். அதை தடுப்பதற்காவே மின்சாதன உறை பெட்டிகள் நிலவாயுடன் தொடுக்கப்பட்டிருக்கும். அப்படி தொடுப்பதன் மூலம் மின்னழுத்த செயற்றித்தை குறைக்கலாம். மின்சாதனம் திறமையாக வடிவமைக்கப்பட்டிருந்தால், அவ் சாதனம் நில வாயுடன் ஏற்படுத்தபடும் குறுக்கு மின்பாதையின் போது மின் உருக்கியை செயல்பட வைத்து, மின்சாதனத்தை செயலிழக்க செய்துவிடும்.

நுட்பியல் சொற்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Mellanby (1957). The History of Electric Wiring. London: Macdonald.
  2. "Alert noting non-compliant power strips" (PDF). 2009. Archived from the original (PDF) on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  3. "Sri Lanka Sets National Standard for Plugs and Socket Outlets". Public Utilities Commission of Sri Lanka. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019. Standardized on Type G; sale of non-compliant sockets is banned as of August, 2018, and buildings must re-wire by August, 2038.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்காந்த_சக்தி_வாய்கள்&oldid=4101890" இலிருந்து மீள்விக்கப்பட்டது