உள்ளடக்கத்துக்குச் செல்

மார்லன் அபெலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்லன் அபெலா (Marlon Abela, பிறப்பு 1975) ஒரு லெபனானில் பிறந்த பிரித்தானியராவார். இவர் உணவக முனவர், தொழிலதிபர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் இலண்டனின் உள்ள மேஃபேர் மையத்தில் உள்ள ஒரு தனிப்பட்ட சர்வதேச விருந்தோம்பல் நிறுவனமான மார்லன் அபெலா உணவக கழகத்தின் (MARC) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவரது தந்தை ஆல்பர்ட் அபேலா, குழுமத்தின் ஒரு சமையலகத்துடன் கூடிய உணவகச்சேவை குழுமமான அபெலா குழுமத்தின் தலைவராகவும் ஆடம்பர ஓட்டல் உரிமையாளராகவும் இருந்தார்.[1] அவரது தாய், பார்பல், ஜேர்மன் ஆவார். கிராஸ், பிரான்சு மற்றும் மொனாக்கோ ஆகியவற்றில் ஏபெலா வளர்ந்தாா். பதினேழாம் வயதில் தனது தந்தையின் வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார். 2001 இல், அதன் துணைச் செயல் தலைவரானார். அபேலா 2001 ஆம் ஆண்டில் மார்லன் அபெலா உணவக கழகத்தை (MARC) நிறுவினார். இந்நிறுவனம் மேஃபேரைத் தலைமையிடமாக உள்ளது. அபேலா அதன் தலைவராகப் பணியாற்றுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

2011 இல் மார்லன் அபெலா நதியா அபேலாவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Walsh (September 2012). "Marlon Abela: 'Aged eight, I was fine dining'". John Walsh. I ndependent. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்லன்_அபெலா&oldid=2720692" இலிருந்து மீள்விக்கப்பட்டது