உள்ளடக்கத்துக்குச் செல்

மாஞ்சா நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஞ்சா நூல், வஜ்ரம் அல்லது சவ்வரிசி கலவையில், கண்ணாடி துகள்களை கலந்து, பட்டத்தின் நூலில் தோய்த்து மாஞ்சா நூலை தயாரிக்கின்றனர். எதிராளியின் பட்டத்தின் நூலை அறுக்க மாஞ்சா நூல் உதவுகிறது. சில சிறு வணிகர்கள் தனியாக மாஞ்சா நூலை தயாரித்து விற்பதுண்டு. [1]தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மாஞ்சா நூல் பட்டம் விடுகின்றனர்.

மாஞ்ச நூல் பட்டதிற்கு தடை

[தொகு]

சென்னையில் மொட்டை மாடிகளில் மற்றும் விளையாட்டுத் திடல்களில் பட்டம் விடுவது வழக்கம். சிலர் விளையாட்டாக அடுத்தவர்களின் காற்றாடிகளை வீழ்த்த, மாஞ்சா நூல் கொண்ட பட்டங்களை பறக்கவிட்டு பந்தயம் வைப்பதுண்டு. உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பட்டம் தீடிரென அறுந்து கீழே விழம் போது பட்டத்தின் மாஞ்சா நூல், மரக்கிளைகள், மின் கம்பிகள், கட்டடங்களில் சிக்குவது உண்டு. சிலநேரங்களில் சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் கழுத்தை அறுத்து உயிரையும் பறித்து விடுகிறது. கண்ணாடி துகள்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் பட்டங்களால் ஆண்டு தோறும் உயிர்ச் சேதம் ஏற்படுவதால், மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மாஞ்சா நூல் பட்டம் விடுபவர்களுக்கு அதிக பட்சமாக இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மாஞ்சா தடவிய நூல் கொண்ட பட்டம் விடுபவர்களையும், மாஞ்சா நூல் விற்பவர்களையும், தயாரிப்பவர்களையும் காவல் துறை கண்டுபிடித்து குற்றவழக்கு பதிவு செய்கின்றனர்.[2] [3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மாஞ்சா நூல் விற்பவர்களிடம் மாமூல் வசூலிக்கும் போலீஸ்
  2. தந்தையுடன் பைக்கில் சென்றபோது பரிதாபம்: மாஞ்சா நூல் அறுத்து 5 வயது சிறுவன் பலி - நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் நடவடிக்கை எடுக்காத போலீஸ்
  3. சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது
  4. மாஞ்சா நூல் : சென்னை போலீஸ் எச்சரிக்கை

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஞ்சா_நூல்&oldid=2813619" இலிருந்து மீள்விக்கப்பட்டது