மறை நீர்
மறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும். அந்த பொருளை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் தான் மறை நீர். மறை நீர் வணிகம் என்பது ஒரு பொருளாதார தத்துவம் ஆகும். அதாவது ஒரு மெட்ரிக் டன் கோதுமைக்கு தேவைப்படும் நீரின் அளவு 1,600 கியூபிக் மீட்டர் ஆகும். ஆனால் கோதுமை விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. எனினும் அந்த நீர், கோதுமை தானியங்களுக்காக செலவிடப்பட்டிருப்பதால் அதில் மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். இவ்வாறு ஒரு மெட்ரிக் டன் கோதுமையை ஏற்றமதி செய்யும் நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரை செலவழிக்கிறது. அதேப்போல ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரை சேமித்துக்கொள்கிறது. இதுவே மறை நீர் பொருளாதார தத்துவம் ஆகும்.[1]
தேவைப்பாடு
[தொகு]ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 2500 முதல் 3000 லிட்டர்கள் தண்ணீர் மறைமுகமாக தேவைப்படுகிறது. 1.1 டன் எடைகொண்ட இலகு ரக வாகனத்தை உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீரும், ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகிறது. [2]