மறென் லெ பூர்ஸ்ஷூவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மறென் லெ பூர்ஸ்ஷூவா
பிறப்புமறென் லெ பூர்ஸ்ஷூவா
1550
லிசியொ, பிரான்சு
இறப்பு1634
பணிகலைஞர்/கண்டுபிடிப்பாளர்
அறியப்படுவதுதீக்கல் இயக்கத்தை கண்டுபிடித்ததற்கு

மறென் லெ பூர்ஸ்ஷூவா (தோராயமாக 1550–1634) என்பவர், ஒரு பிரெஞ்சு கலைஞரும், கண்டுபிடிப்பாளரும் ஆவார். இரண்டு நூற்றாண்டுகளாக சுடுகலன்களில் பயன்பாட்டில் இருந்த தீக்கல் இயக்கத்தை கண்டுபிடித்ததாக அறியப்படுபவர்.

வாழ்க்கை [தொகு]

பிரான்சின், நோர்மாண்டியில் உள்ள லிசியொவில், ஒரு கலைக் குடும்பத்தில் பிறந்தார் மறென் லெ பூர்ஸ்ஷூவா. ஆரம்பத்தில் இவர் ஓவியராக தான் பயின்றார். பின்னர் கலைஞராக மட்டுமல்லாமல், ஒரு துமுக்கிகொல்லராகவும், கண்டுபிடிப்பாளருமாக போற்றப்பட்டார். 1598-ல், இவரின் திறமைகளால் கவரப்பட்ட மன்னர் நான்காம் ஹென்றி, அரசவையில் பணியாளாக நியமித்தார். கலைவேலைபாடுகள், சுடுகலன்கள், வளிம துப்பாக்கிகள், மற்றும் குறுக்குவில்கள் ஆகியவற்றை இவர் தயாரித்தார்.

மன்னர் பதிமூன்றாம் லூயீயின் ஆட்சியிலும் இவர் அரச சேவையை தொடர்ந்தார். 1610-க்கும் 1615-க்கும் இடைப்பட்ட காலத்தில், முந்தைய தீக்கலியக்க அமைப்புகளின் (சொடுக்கொலி, சொடுக்குஞ்சேவல்)   மேம்பாடான, "அசல்" தீக்கல்லியக்கச் சுடுகலனை முதன்முதலில் இவர் உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இவரின் அடிப்படை வடிவமானது, மொத்த ஐரோப்பாவிலும் விரைவில் பரவிவிட்டது.

மறென் லெ பூர்ஸ்ஷூவாவின் வடிவத்தின் ஒரு சிறப்பம்சமே, அதிலுள்ள அரை-இழுபட்ட நிலை தான். அந்த அரை-இழுபட்ட நிலையில் ஆயுதத்தில் மீள்குண்டேற்ற முடியும், அனால் அதேசமயம் துப்பாக்கியும் வெடிக்காது. இந்த அம்சம் முந்தைய வடிவங்களைவிட பாதுகாப்பானது, மேலும் மற்ற துமுக்கிகொல்லர்களும் இதை அமல்படுத்தினர்.

மேற்கோள்கள்[தொகு]

  • 2004-ல், ABC-CLIO-வால் பிரசுரிக்கப்பட்ட ஜெஃப் கினார்டின் "Pistols: An Illustrated History of Their Impact"  
  • டார்ஸ்டென் லென்க்கின் "The Flintlock: Its Origin, Development, and Use"
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறென்_லெ_பூர்ஸ்ஷூவா&oldid=2229823" இலிருந்து மீள்விக்கப்பட்டது