மயுங் கோபால்
Appearance
மயுங் கோபால் [1] மலை *(Mayung Kopal) வங்காளதேசத்தின் காக்ராச்சாரி மலை மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். [2] மயுங் கோபால் மலை கடல் மட்டத்திலிருந்து 1208 அடி உயரத்தில் உள்ளது. [3]
அமைவிடம்
[தொகு]காக்ராச்சாரி மலை மாவட்டத்திற்கு உட்பட்ட பேரச்சரா ஒன்றியத்தில் மயுங் கோபால் மலை அமைந்துள்ளது. [4] குறிப்பாக சாகசத்தை விரும்புவோரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்த மலை திகழ்கிறது. மயுங் கோபால் மலையின் உச்சியில், திரிபுரி பழங்குடி மக்கள் வசிக்கின்றனர் . மலைவாழ் மக்களை செங்குத்தான பாதையில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டதால், சிட்டகாங் மலைப்பாதை மேம்பாட்டு வாரியம் 2015 ஆம் ஆண்டு இந்த மலையில் படிக்கட்டுகளை கட்டியது. இந்த மலையின் உச்சியை அடைய 300 படிகட்டுகள் ஏற வேண்டும். இப்படிக்கட்டுகள் படிப்படியாக உயரமான மலையை நோக்கி செல்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hakim, Muhammad Javed (2021-08-22). "ঘুরে এলাম মায়ুং কপাল" (in bn). Jugantor. https://www.jugantor.com/lifestyle/456352/%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%81%E0%A6%82-%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2.
- ↑ "পর্যটকদের নতুন আকর্ষণ খাগড়াছড়ির ‘মায়ুং কপাল’" (in bn). CvVoice24. 2019-10-04. https://www.cvoice24.com/special-news/news/26780.
- ↑ "পর্যটনে নতুন সম্ভাবনা খাগড়াছড়ির 'মায়ুং কপাল'" (in bn). Independent. 2019-08-12. https://independent24.com/details/53315/details/73055/details/80331/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%20%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%95%20%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%95%20%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9.
- ↑ "Khagrachari Tourist Spot (Khagrachari Must Visit Place)". Travel Place BD. பார்க்கப்பட்ட நாள் 30 January 2023.