மம்தா தாஸ்
Appearance
மம்தா தாஸ் | |
---|---|
பிறப்பு | மம்தா மோஹபத்ரா [1] 4 அக்டோபர் 1947 ஜகத்சிங்பூர் |
தேசியம் | இந்தியன் |
கல்வி | இளங்கலை |
கல்வி நிலையம் | உத்கல் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அன்யா ஜகதாரா சகலா, அபக் ஸ்வர்கா, உஜ்வாலா உபபானா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | ஒடிய சாகித்ய அகாடமி விருது, கங்காதர ராத் அறக்கட்டளையின் பானுஜி ராவ் விருது |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
மம்தா தாஸ் அல்லது மம்தா டேஷ் ( Mamata Dash பிறப்பு 4 அக்டோபர் 1947) ஓர் ஒடிய கவிஞர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர். [2] இவரது கவிதைத் தொகுப்பான ஏகாத்ரா சந்திரசூர்யாவுக்கு ஒடிய மொழிக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
சுயசரிதை
[தொகு]மம்தா அக்டோபர் 4, 1947 அன்று ஜகத்சிங்பூரில் பிறந்தார். இவரது தந்தை ராமச்சந்திர மொஹாபத்ரா ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாயின் பெயர் பங்கஜ்மாலா. அவருக்கு 4 சகோதரிகள் மற்றும் 3 சகோதரர்கள் இருந்தனர். கட்டாக்கின் ராவன்ஷா பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பு ஜகத்சிங்பூரில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். இவர் தனது ஒன்பது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவரது சில கவிதைகள் குழந்தைகளின் மாத இதழான மீனாபஜரில் வெளியிடப்பட்டன. [3] துணைவரின் பெயர் டாக்டர் ரகுநாத் டாஷ்
படைப்புகள்
[தொகு]- தசா, மம்தா (1985). ஏகாத்ரா சந்திரசூர்யா (in ஒடியா). இணையக் கணினி நூலக மைய எண் 18255506.
- தசா, மம்தா (1989). அபக் ஸ்வர்கா (in ஒடியா). கதகா ஸ்துதன்தாஸ் சோத்ரா. இணையக் கணினி நூலக மைய எண் 24504041.
- தசா, மம்தா (1992). அன்யா ஜகதாரா சகலா (in ஒடியா). ஆக்ராதுதா. இணையக் கணினி நூலக மைய எண் 29387555.
- தசா, மம்தா (1994). உஜ்வாலா உபபானா (in ஒடியா). பித்யாபுரி. இணையக் கணினி நூலக மைய எண் 31241920.
அங்கீகாரம்
[தொகு]- ஒடிய சாகித்ய அகாடமி விருது, 1987 [1]
- கங்காதர ராத் அறக்கட்டளையின் பானுஜி ராவ் விருது [2]
- ஒடிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாரத நாயக் ஸ்மிருதி சம்மனா
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Dutt, K.C.; Sahitya Akademi (1999). Who's who of Indian Writers, 1999: A-M. Who's who of Indian Writers, 1999. Sahitya Akademi. p. 290. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-0873-5.
- ↑ 2.0 2.1 "Mamta Dash". Authorspress. Archived from the original on 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2021-02-27."Mamta Dash". Authorspress. Archived from the original on 2020-04-26. Retrieved 2021-02-27.
- ↑ "Newage Media & Publications Pvt. Ltd". E-paper. 2019-11-24. Archived from the original on 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.