உள்ளடக்கத்துக்குச் செல்

மனித வளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித வளம் (human resources) என்பது மனிதர்களை நிறுவனங்கள் எவ்வாறு முகாமைத்துவப் படுத்துகின்றார்கள் என்பதைக் குறிக்கின்றது. இத் துறையானது பாரம்பரிய அதிகார ரீதியான செயற்பாட்டிலிருந்து தளத்தகைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இம் மாற்றமானது திறமை வாய்ந்த ஊக்கமுள்ள மக்களுக்கும் நிறுவனங்களின் வெற்றிக்கும் இடையிலான உறவு முறையை அறிந்து கொள்ள மிகவும் உதவுகின்றது. இத்துறையானது நிறுவனங்களின் உளவியலையும் அமைப்பு சார்ந்த கொள்கைகளையும் வளர்த்துள்ளது. மனித வளமானது உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு வகையான மேல் விளக்கத்தைக் கொண்டுள்ளது.[1][2][3]

இது முதலாவதாக அரசியல் பொருளியலிலும் பொருளியலிலும் பயன்படுத்தப்பட்டது.

மனிதவளப் பங்கு

[தொகு]

நிறுவனத்தின் தரம் மற்றும் திறன் மேம்பாட்டில் மனிதவளம் பெரும்பங்கு வகிக்கிறது. தனி நபரின் திறனை ஊக்குவிப்பதன் மூலம் நிறுவனத்தின் தேவை, எதிர்பார்ப்புகளைத் திறம்பட பூர்த்தி செய்யும் மேலாண்மை துறையாகும்.

ஒரு வெற்றிகரமான திறன்களின் தொகுப்பாக மனிதவளத்தை பயன்படுத்துதல் மற்றும், அதன் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுத்தல் போன்றவை முக்கிய செயற்பாடுகளாகும். ஒரு தனிநபர் முக்கியமாக நிறுவனத்தின் (அ) சுயமேம்பாட்டுத் தேவைகளை ஆற்றுவதற்காக தயார்படுத்தப் படுகின்றார். "குறித்த காலத்தில் ஒழுங்கு படுத்தப்பட்ட அறிதலானது, செயற்பாட்டு ரீதியான ஒரு முன்னேற்றத்துடனான மாற்றத்தை வழங்குகின்றது" என நட்வர் குறிப்பிடுகிறார். இந்த ஓழுங்கமைப்பில் மனித வள வளர்ச்சி என்பது ஒரு கட்டமைப்பைப் போன்றது.

முதலாவது கட்டமானது பயிற்சி, பின்பு தொழிலாளர்களை முன்னேற்றுதல், நல்லகல்வி, தனிப்பட்ட நபர்களினதும் நிறுவனங்களின் நீண்டகால தேவைகளையும், மனித வள மேம்பாடு சாதாரணமாகப் பின்வறுமாறு வரையறை செய்யப்படுகின்றது.

  • ஆட்தேர்வு
  • பயிற்சியும், மேம்பாடும்
  • பணி பொறுப்பு வழங்கல்
  • திறன் வளர்த்தல்
  • மதிப்பீடு மற்றும் தரமுயர்த்தல்
  • சம்பளப் பட்டுவாடா
  • பணியாளர் நலன்பேணல்

இன்னும் எளிதாக “நிறுவனங்களின் விளைதிறனை முன்னேற்றும் முகமாக நிறுவனங்களின் அனைத்து தொழிலாளர்களினதும் திறமைகள் மற்றும் வெளிக்காட்டல்களை தரமுயற்றுதல், மனித வளத்தின் இன்றியமையாச் சிறப்பாகும்.

மனித வள மேம்பாடு

[தொகு]

மனித வள மேம்பாட்டின் நோக்கமானது மனிதவளத்தின் முழுமையை வளர்ப்பதற்காக அறிவூத்துவன் ஊடகவூம் கல்வி, பயிற்சி சுகாதாரம் அனைத்து மட்டங்களில் ஊடாக வேலை வாய்ப்பு போன்றவற்றின் இணைந்த கொள்கைகளினால் பெறப்படுகின்றது.

மனித வள முகாமைத்துவம்

[தொகு]

மனித வள முகாமைத்துவத்தின் மறுபக்கத்தை பார்ப்போமேயானால் நிறுவனத்தினுடைய அறிவு மூலதனத்தை அதிகரிப்பதற்கும், நிதி இடர்களை குறைப்பதற்கும் உதவுகின்றது. மேலும் இம்முகாமைத்துவம் திறமையாகவும், சட்ட ரீதியாகவும், ஒழுங்கான முறையிலும் செயற்படுத்தும் மனித வள முகாமையாளரின் பொறுப்புகளுக்கு முக்கியத்துவமளிக்கிறது.

முக்கியமான செயற்பாடுகள்

[தொகு]

மனித வள முகாமைத்துவம் 7 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

  1. ஆட்சேர்ப்பும் தெரிவும்
  2. பயிற்சியும் அபிவிருத்தியும்
  3. செயற்பாட்டு மதிப்பீட்டு முகாமைத்துவம்
  4. மேம்படல்,
  5. இடமாற்றம்
  6. கைத்தொழிலும் ஊழியர் உறவும்
  7. எல்லா தனிப்பட்ட தரவுகளின் உடைய பதிவு பேணல்
  8. மொத்த பரிசுகள் : ஊழியர் இலாபமும் நட்டமும்
  9. வேலைகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் உள்ளக வாடிக்கையாளர்களுக்கு இரகசிய ஆலோசனை
  10. தொழில் அபிவிருத்தி
  11. தரமான இணைப்பு
  12. மனித வள செயற்பாட்டோடு இணைந்த நேர அசைவு ஆய்வு
  13. செயற்றிறன் மதிப்பீடு

மனித வளத்தின் பாதைகள்

[தொகு]

மனித வளமானது வணிக நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் மனித வள முகாமைத்துவம் ஆரம்ப காலத்தில் இருந்து வளர்ந்து வந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மனித வளம் தொடர்பான கருத்து வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. எனினும் பல காரணங்களால் இதற்கான சவால்கள் எழுந்த போதிலும் மனித வளம் தனக்கே உரித்தான முகாமைத்துவத்தின் மூலம் முன்னேறியது. இன்று நிறுவனங்களின் ஒரு நிரந்தமான முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தனிப்பட்ட மறு மொழி

[தொகு]

ஒரு தொழிலாளர் சந்தையின் மாற்றங்களுக்குத் தனியார் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தொடர்பான கருத்துக்கள் புவியியல் பரப்பு துனியான இடமின்றி வேறு எவ்வளவு தூரம் வேலைக்குச் செல்லும் தூரமானது நிறுவனத்தினாலும் போக்குவரத்து துறையினாலும் கட்டணம் செலுத்தப்பட்ட முறையில் இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் யார் வேலைக்கு விண்ணப்பிக்கின்றார்களோ அதைத் தீர்மானிக்கும் அம்சம் வேலைப்பரப்பு உள்ளடக்கிதாக இருத்தல் வேண்டும் வேலைக் கட்டமைப்பு நிறுவனத்திக்குள் வேறுபட்ட வேலையினுடைய பெறுமதிகளும் மாதிகளும் இருத்தல் வேண்டும். மகோனே 1989ல் வேறுபட்ட வேலைக் கட்டமைப்புக்களை விருத்தி செய்தார்கள் அவையாவன தந்திரம் நிறுவன வேலை கட்டமைப்பற்றது உற்பத்தி சார்ந்த வித்தியாசம் ஊழியர்களுடைய வேறுபட்ட வயது வகை சரியான அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. உதாரணமாக அவர்களுடைய நடவடிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் நிறுவத்தின் உடையது

வேலை வாய்ப்பு

[தொகு]

மனித வள மேம்பாடு நிறுவனத்தினுள் மனித மூலதனத்தின் உடைய விரிவிக்கான ஒரு கட்டமைப்பாகும். பிரதேசம் அல்லது தேசம் சார்ந்தது மனித வள மேம்பாடனது கல்வியிலும் பயிற்சியூடையதும் கட்டமைப்பாகும். விரிவாக பார்போமானால் போதுமான சுகாதாரமும் வேலைவாய்ப்பு கொள்கையூம் நிறுவனத்தின் உடையதும் தனியாரினதும் வளர்ச்சியையூம் தொடர்ச்சியான விருத்தியையூம் உறுதிப்படுத்துகின்றது. ஆடம்ஸ்மித் “தனிப்பட்டவரினது கொள்ளவது அவர்களுடைய கல்வியில் தங்கியூள்ளது” என கூறுகிறார். மனிதவள மேம்பாடானது நடுத்தரமானது அது பரந்த சுற்றாடலில் பயிற்சிக்கு கற்றலுக்கும் இடையில் உள்ள செயன் முறையில் இருந்து பெறப்படுகின்றது. மனித வள மேம்பாடானது விரிவான கருத்து அல்ல ஆனால் ஓர் அமைப்பு செயன் முறையின் தொடராகும். தேசிய உடன்பாட்டில் இது சுகாதாரமும் கல்வி வேலைவாய்ப்பு என்பவற்றிக் கிடையில் உள்ள தந்திரோபாய தொடர்பில் இருந்து பெறப்படுகின்றது.

கட்டமைப்பு மனித வள மேம்பாடானது ஒரு கட்மைப்பு அது தனிப்பட்ட அபிவித்திக்கவூம் நிறுவனத்தின் உடைய திருப்திக்காவூம் அனுமதி அளிக்கின்றது. தனிப்பட்டவரினது மேம்பாடானது தனியார் நிறுவனம் அல்லது தேசத்திற்கு நன்மை அளிக்கின்றது. ஓன்றிணைந்த பார்வையில் நோக்கும் போது மனித வள மேம்பாட்டு கட்டமைப்பானது ஊழியர்களை நிறுவனத்தின் உடைய சொத்தாக நோக்குகின்றது. இது ஊழியர் விருத்தியினதும் வளச்சியினதும் பிரதான நோக்கு ஆகும். இது தனியான திறமையை விருத்தியை உறுதிப்படுத்துகின்றது. இந்த செயற்பாட்டின் மனித வள மேம்பாடானது உள்ளறை குழுப்பயிற்சிக்காக அல்லது வெளியீடானது தனிநபரின் உடைய செயற்பாட்டை விருத்தி செய்கின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is Human Resources? Definition of Human Resources, Human Resources Meaning". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-25.
  2. Aswal, Dinesh K. (2020-11-09). Metrology for Inclusive Growth of India (in ஆங்கிலம்). Springer Nature. p. 987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-15-8872-3.
  3. Haas, Hein de; Castles, Stephen; Miller, Mark J. (2019-11-21). The Age of Migration: International Population Movements in the Modern World (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. p. 332. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-352-00713-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_வளம்&oldid=4101761" இலிருந்து மீள்விக்கப்பட்டது