மட்டத்திலா அணை
Appearance
மட்டத்திலா அணை | |
---|---|
புவியியல் ஆள்கூற்று | 25°06′03″N 78°22′30″E / 25.1007121°N 78.3749048°E |
திறந்தது | 1958[1] |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | பேட்வா ஆறு |
நீளம் | 6,300 மீ[1] |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | மட்டத்திலா நீர்த்தேக்கம் |
மட்டத்திலா மின்நிலையம் | |
பணியமர்த்தம் | 1965[2] |
சுழலிகள் | 3×11மெ.வா. |
நிறுவப்பட்ட திறன் | 33 மெ.வா.[2] |
மட்டத்திலா அணை (Matatila Dam) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அணையாகும், இது 1958-ல் பேட்வா ஆற்றின் மீது கட்டப்பட்டது. இது தியோகரில் இருந்து 93 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த மண் அணை 35 மீ உயரம் கொண்டது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 20 சதுர கி.மீ. ஆகும். இதனுடைய அதிகபட்ச சேமிப்பு திறன் 1132 மில்லியன் கன மீட்டர் ஆகும்.
இந்த அணை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. நீர் விளையாட்டு வசதிகள் இங்கு உள்ளன. இது ஜான்சி மற்றும் பாபினாவினை இணைக்கிறது.[3] [4]
இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்: மட்டத்திலா, தல்பஹத் ( 10 கி.மீ.) மற்றும் லலித்பூர் (40 கி.மீ.).
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Matatila Dam". India-WRIS. Archived from the original on 27 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Matatila Power House PH00273". India-WRIS. Archived from the original on 27 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Matatila Dam in India". India9.com. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.
- ↑ "Matatila Dam - Wikimapia". Wikimapia.org. பார்க்கப்பட்ட நாள் 26 December 2018.