உள்ளடக்கத்துக்குச் செல்

மக்னீசியம் நைத்திரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியம் நைத்திரைடு
Magnesium nitride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மக்னீசியம் நைத்திரைடு
இனங்காட்டிகள்
12057-71-5 Y
பப்கெம் 16212682
பண்புகள்
Mg3N2
வாய்ப்பாட்டு எடை 100.9494 கி/மோல்
தோற்றம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தூள்
அடர்த்தி 2.712 கி/செ.மீ3
உருகுநிலை approx. 1500° செல்சியசு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-சொற்றொடர்கள் R36, R37, R38
S-சொற்றொடர்கள் S26, S36
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மக்னீசியம் நைத்திரைடு (Magnesium nitride) என்பது (Mg3N2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் மற்றும் நைட்ரசன் சேர்ந்து உருவாகும் அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இச்சேர்மம் பசுமை கலந்த மஞ்சள் நிறத்தூளாகக் காணப்படுகிறது.

வேதிப்பண்புகள்

[தொகு]

பல உலோக நைத்திரைடுகள் போலவே மக்னீசியம் நைத்திரைடும் தண்ணீருடன் வினைபுரிந்து மக்னீசியம் ஐதராக்சைடு மற்றும் அமோனியா வாயு ஆகியனவற்றை உற்பத்தி செய்கிறது.

Mg3N2(s) + 6 H2O(l) → 3 Mg(OH)2(aq) + 2 NH3(g)

உண்மையில் மக்னீசிய காற்றில் எரியும் போது உருவாகும் பிரதான பொருளான மக்னீசியம் ஆக்சைடுடன் கூடுதலாக மக்னீசியம் நைத்திரைடும் உருவாகிறது.

பயன்கள்

[தொகு]

செயல்முறையாக தொகுப்பு முறையில் போரசோன் எனப்படும் கனசதுர போரான் நைத்திரைடு தயாரிக்கையில் மக்னீசியம் நைத்திரைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது[1].

வெப்பம், அழுத்தம் மற்றும் ஒரு வினையூக்கி ஆகிய மூன்றையும் இணைத்து அறுகோண வடிவ போரான் நைத்திரைடை கனசதுர வடிவ போரான் நைத்திரைடாக மாற்றும் முயற்சியில் ராபர்ட் எச்.வேண்டார்ஃப், சூனியர் ஈடுபட்டார். காரணக் காரியத் தொடர்புடைய அனைத்து வினையூக்கிகளையும் (எடுத்துக்காட்டாக, தொகுப்பு முறையில் வைரம் தயாரிக்கையில் பயன்படுத்திய வினையூக்கிகள்) இவர் பயன்படுத்தி முயற்சித்த போதும் இவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அதிகபட்ச தவறுகள் செய்து கண்டறியும் முறை[2]), என்ற பெயரில் நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் மக்னீசியம் கம்பியுடன் அறுகோண போரான் நைத்திரைடு சேர்த்து அதே அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் சூடுபடுத்தினார். நுண்ணோக்கியில் மக்னீசியம் கம்பியைச் சோதித்து பார்த்த இவர், சிறிய கருப்பு நிறத்தில் குவியல்கள் கம்பியைப் பற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார், இக்குவியல்களைச் சுரண்டி பரிசோதனை செய்ததில் இது போரான் கார்பைடு என்பதைக் உணர்ந்தார்

மக்னீசியம் உலோகம் போரான் நைத்திரைடுடன் வினைபுரிந்து மக்னீசியம் நைத்திரைடு உருவாகிறது என்பதை காற்றின் ஈரப்பதத்துடன் மகனீசியம் நைத்திரைட்டு வினை புரியும் போது வெளிப்பட்ட அமோனியா வாசனையிலிருந்து இவர் ஊகித்தறிந்தார். இதன்மூலம் மக்னீசியம் உலோகம் உண்மையான வினையூக்கி என்பதை கண்டறிந்தார்.

ஆர்கான் பிரித்தெடுத்தலின் போது, ஆக்சிசனை நீக்க செப்பு மீதும் மற்றும் மகனீசியம் நைத்திரைட்டு உருவாக்கும் போது நைட்ரசனை நீக்க மக்னீசியம் மீதும் வில்லியம் ராம்சே உலர்ந்த காற்றைச் செலுத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Robert H. Wentorf, Jr. (March 1961). "Synthesis of the Cubic Form of Boron Nitride". Journal of Chemical Physics 34 (3): 809–812. doi:10.1063/1.1731679. 
  2. Robert H. Wentorf, Jr. (October 1993). "Discovering a Material That's Harder Than Diamond". R&D Innovator. பார்க்கப்பட்ட நாள் June 28, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியம்_நைத்திரைடு&oldid=2053384" இலிருந்து மீள்விக்கப்பட்டது