மகாராசகடை குகை எழுத்துக்கள்
Appearance
மகாராசகடை குகை எழுத்துகள் என்பவை தமிழ்நாட்டின் கிருட்டினகிரி மாவட்டம் மகாராசகடை என்ற ஊருக்கு அருகில் அங்கணா மாலையில் உள்ள குகையில் காணப்படும் எழுத்துகள் ஆகும். மகராசாகடை ஊருக்கு அருகில் உள்ள மலையில் உள்ள ஈசுவரன் கெவி எனப்படும் குகையில் 'தமிழி' எனப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கும், சிந்துவெளி எழுத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட எழுத்துவடிவங்கள் காணப்படுகின்றன. அதன் காலம் கி.மு.1800-500 ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அக்காலகட்டத்தில் சிந்துவெளி எழுத்தையும், தமிழி எழுத்தையும் கலந்த எழுத்து முறையையும் அக்கால மக்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கமட்டன் மகன் சகடன் அனங்கன் என்பவன் பெயர் இதில் எழுதப்பட்டுள்ளது. கமட்டன் என்பது தமிழியிலும் சகடன் அனங்கன் என்பது சிந்துவெளி எழுத்திலும் எழுதப்பட்டுள்ளது.[1]
இதனையும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகள், ப.துரைசாமி, இரா.மதிவாணன். பக்.172