போர் விளைவு
Appearance
போர் விளைவு (Bohr effect) எனும் ஹீமோகுளோபினின் தனிப்பண்பை 1904 ஆம் ஆண்டு டச்சு நாட்டு உடலியங்கியல் அறிஞரான கிறிஸ்டியன் போர் (இயற்பியல் அறிஞர் நீல்ஸ் போரின் தந்தை) விவரித்தார். இவ்விளைவின் படி, குருதியில் புரோட்டான்களின் செறிவும் கரியமில வாயுவின் செறிவும் அதிகமாகும் போது ஹீமோகுளோபின் - ஆக்ஸிஜன் இடையிலான கவர்ச்சி குறைகிறது. ஆகவே ஆக்சிஜன் ஹீமோகுளோபினில் இருந்து பிரிந்து திசுக்களுக்குக் கிடைக்கிறது.