பெரியாச்சி அம்மன்
பெரியாச்சி அம்மன் என்பது நாட்டார் பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் நாட்டார் தெய்வங்களில் மிகவும் கோரமான அமைப்பினைக் கொண்டவர். குழந்தைகளை காக்கும் தெய்வமாக மக்கள் வணங்குகின்றனர்.
உருவ அமைப்பு
[தொகு]பெரியாச்சி அம்மன் எட்டு கைகளைக் கொண்டவர். முன் இரு கைகள் மடியில் கிடத்தியிருக்கும் பெண்ணின் வயிற்றினைக் கிழித்தவாறும், ஒரு கையில் குழந்தையொன்றை தாங்கியபடியும் உள்ளார். மற்ற கைகளில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. காலுக்கு கீழே ஒரு அரசனை மிதித்தபடி உள்ளார்.
கதை
[தொகு]வல்லாளன் எனும் அரசனுக்கு முனிவர்கள் சாபம் தந்திருந்தனர். அதன்படி வல்லாளனுக்கு குழந்தை பிறந்தால் அவன் மரணம் அடைவது உறுதி என்று கூறினர். ஆனால் வல்லாளனின் மனைவிக்கு இறைவி உதவ மூதாட்டி வடிவில் வந்தாள். அவள் வல்லாளனின் மனைவிக்கு பிரசவம் பார்ப்பதற்கு ஒரு நிபர்ந்தனை வைத்தான். குழந்தையை மண்ணில் விழாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். மூதாட்டியும் சம்மதம் தெரிவித்து ஒரு பாறையின் மீது அமர்ந்து கர்பிணியை மடியில் கிடத்தி கைகளால் அவளுடைய வயிற்றைக் கிழித்து குழந்தையை கையில் தூக்கிக் கொண்டாள்.
மருத்துவச்சியையும் குழந்தையையும் கொல்ல வல்லாளன் உள்ளே வர, அவனுடன் போரிட்டு வீழ்த்தினாள். கணவனை காக்க எழுந்த மனைவியின் குடலை அள்ளி உண்டாள். மக்களை அவளை பெரிதும் மதித்து வணங்கினார்கள்.
கோயில்கள்
[தொகு]- அம்பகரத்தூர், காரைக்கால் மாவட்டம், புதுச்சேரி [1]
- மாயனூர் செல்லாண்டியம்மன் கோயில், கரூர் மாவட்டம்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-12. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.