பெனோப்ரோபென்
பெனோப்ரோபென் (Fenoprofen) ஒரு அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் பகுப்பில் அடங்கும் மருந்து ஆகும். இது பொதுவாக தசை, மூட்டழற்சியால் ஏற்படும் வலி , காய்ச்சல், வேறு சிறிய அளவிலான வலிகள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இம்மருந்து புரொப்பியோனிக் காடிக் கிளைப் பொருள்கள் வகைக்குள் அடங்குகின்றது. இம்மருந்து Nalfon போன்ற வணிகப் பெயர்களில் விற்பனை செய்யப்படுகின்றது.[1]
வேறு வணிகப் பெயர்கள் |
---|
Fenopron. |
மருத்துவப் பயன்பாடு[தொகு]
பொதுவாக முடக்குவாத மூட்டழற்சி போன்ற மூட்டழற்சியால் ஏற்படும் குறைவான, மிதமான வலி, காய்ச்சல் போன்ற நோய்களுக்கு பெனோப்ரோபென் பயன்படுத்தப்படுகின்றது, இவை தவிர தேய்மான மூட்டழற்சி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.
பக்க விளைவுகள்[தொகு]
இம்மருந்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரதான பக்கவிளைவுகள் சிறுநீரகப்பாதிப்பு, குடற்புண், மலச்சிக்கல் ஆகும். இவற்றைத்தவிர தலைச்சுற்று, தூக்கமின்மை, வியர்த்தல், தோல் அரிப்பு பக்க விளைவுகளும் பெனோப்ரோபென் பயன்பட்டால் ஏற்படும்.
பயன்பாட்டெதிர் நிலைகள்[தொகு]
இம்மருந்து குடற்புண், ஒவ்வாமை உள்ளவர்கள் அல்லது சிறுநீரகப் பாதிப்பு போன்ற நோய்கள் வந்தவர்களில் அல்லது இருப்பவர்களில் அறவே பயன்படுத்தக் கூடாது.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
- ↑ http://www.rxlist.com