பெண்களின் உரிமைக்கான கொள்கை நிர்ணயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Page reads "A VINDICATION OF THE RIGHTS OF WOMAN: WITH STRICTURES ON POLITICAL AND MORAL SUBJECTS. BY MARY WOLLSTONECRAFT. PRINTED AT BOSTON, BY PETER EDES FOR THOMAS AND ANDREWS, Faust's Statue, No. 45, Newbury-Street, MDCCXCII."
பெண்களின் உரிமைகள் முதல் பதிப்பின் அட்டைப்படம்

பெண்களின் உரிமைக்கான கொள்கை நிர்ணயம்: அரசியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் பயன்பாடு (1792) (A VINDICATION OF THE RIGHTS OF WOMAN: WITH STRICTURES ON POLITICAL AND MORAL SUBJECTS) என்ற புத்தகம் 18 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய பெண்ணியவாதியான மேரி வோல்ஸ்டோன்கிராப்பால் எழுதப்பட்ட பெண்ணிய தத்துவம் சம்பந்தமான ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாகும். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டாளர்கள் யாவரும் பெண்களுக்குக் கல்வி கற்க உரிமை கிடையாது என்று நினனத்திருந்த காலத்தில் அவர்களுக்குப் பதில் கூறும் விதமாக வோல்ஸ்டோன்கிராப் இந்த புத்தகத்தில் பெண்கள் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்று விளக்கியிருப்பார். சமுதாயத்தில் பெண்களுக்குக் கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்று இவர் வாதிடுகிறார், பெண்கள் தேசத்துக்கு அவசியம், ஏனென்றால் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கிறார்கள் மற்றும் அவர்கள் கணவன்மார்களுக்கு மனைவியாக இருப்பதற்குப் பதிலாக "தோழர்களாக" இருக்க முடியும் என்று கூறுகிறார். சமுதாயத்தில் பெண்களை ஆபரணங்களாகப் பார்க்காமல், திருமணத்தின் போது வர்த்தகம் செய்வதற்காகப் பெண்களை ஒரு சொத்தாகப் பார்க்காமல் இருக்க வேண்டும்; மேலும் பெண்களை சக மனிதர்களின் ஒருவராகவும், ஆண்களுக்கு இணையான அனைத்து அடிப்படை உரிமைகளைப் பெற பெண்களும் தகுதியானவர்களே என்றும் வோல்ஸ்டோன்கிராப் கூறிகிறார்.

1791 ஆம் ஆண்டு சார்லஸ் மாரிஸ் டிரீலிரான்ட்-பெரிகார்ட்டின் என்பவர் பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு வீட்டுக்குரிய கல்வி மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றொரு அறிக்கையை சமர்பித்தார். இந்த நிகழ்வே வோல்ஸ்டோன்கிராப் பெண்களின் அடிப்படை உரிமைகள் குறித்து எழுதத் தூண்டுகோலாக இருந்தது. பாலியல் இரட்டைத் தரங்களுக்கு எதிரான பரந்த தாக்குதலைத் தொடங்க இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் அவர் தனது கருத்துக்களைப் பயன்படுத்தினார். மேலும் அதிகமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பெண்கள் ஊக்குவிப்பதாக ஆண்களைக் குற்றஞ்சாட்டவும் செய்தார். இதுபோன்ற நிகழ்வுகளால் வோல்ஸ்டோன்கிராப் அவசர அவசரமாக பெண்களின் அடிப்படை உரிமை குறித்த இந்தப் புத்தகத்தை எழுதி முடித்தார். மேலும் அவர் இதன் இரண்டாம் பாகத்தை நன்கு ஆழமாக சிந்தித்து எழுத வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அதை முடிக்கும் முன் அவர் இறந்து விட்டார்.

வோல்ஸ்டோன்கிராப் வாழ்க்கையின் ஒரு பகுதியான ஒழுக்கநெறிகளில் இரு பாலினத்தவரிடமும் சமத்துவம் வேண்டும் என்று அழைக்கிறார். மேலும் ஆண், பெண் இருவரும் சமம் என்ற வெளிப்படையான கருத்தை அவர் ஒருபோதும் தெரிவித்ததில்லை. ஆகையால் பாலின சமத்துவம் பற்றிய அவரது தெளிவற்ற அறிக்கைகளால் வோல்ஸ்டோன்கிராப்பை ஒரு நவீனப் பெண்ணியவாதியாக வகைப்படுத்தக் கடினமாக இருந்தது. அவருக்குக் கருத்தைச் சொல்லச் சரியான வார்த்தையும் எண்ணம் மற்றும் கரு கிடைக்காமல் இருந்ததே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இதனால் வோல்ஸ்டோன்கிராப்பின் பெண்களின் உரிமைகள் பற்றிய கருத்துக்கள் எதிர்மறையாகவே புரிந்துகொள்ளப்பட்டது. மேலும் 1798 ஆம் ஆண்டில் வில்லியம் கோட்வினின் வெளியிட்ட புத்தகமான "பெண்களின் உரிமைக்கான கொள்கை நிர்ணயம் எழுதிய எழுத்தாளரின் ஞாபகங்கள்" வந்தபோது, வோல்ஸ்டோன்கிராப் அவரது வாழ்நாளில் சந்தித்தத் திட்டுக்களை விட அதிகமான அளவில் நிந்திக்கப்பட்டார். ஆனால் அவரின் புத்தகம் 1792 இல் முதன்முதலாக வெளியிடப்பட்ட போது, நல்ல வரவேற்பைப் பெற்றது. ஓர் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர், வோல்ஸ்டோன்கிராப்பின் புத்தகத்தை அந்த நூற்றாண்டின் மிகச்சிறந்தப் புத்தகம் என்றழைத்தார்.[1]

நூற்பட்டியல்[தொகு]

நவீன மறுபதிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sunstein, 3.

வெளியிணைப்புகள்[தொகு]