உள்ளடக்கத்துக்குச் செல்

பெங்களூரு மா இராமமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மா இராமமூர்த்தி
Ma Ramamurthy
பிறப்புமார்ச்சு 11, 1918
நஞ்சன்கூடு
இறப்பு1967
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஆர்யா கல்லூரி, பெங்களூர்
பணிஎழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர்
அரசியல் இயக்கம்கன்னட இயக்கம்
வாழ்க்கைத்
துணை
கமலம்மா

மா இராமமூர்த்தி (Ma Ramamurthy) இந்தியாவைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் கன்னட ஆர்வலர் என்று பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1] கன்னட வீர சேனானி என்றும் அழைக்கப்படும் இவர் 1918-1967 காலப்பகுதியில் வாழ்ந்தார். 1960 ஆம் ஆண்டுகளில் கன்னட இயக்கத்தின் தளபதியாக பெரும்பாலும் இவர் கருதப்படுகிறார். இராமமூர்த்தி சிவப்பு-மஞ்சள் நிறத்தில் கன்னட கொடியை வடிவமைத்ததில் பெயர் பெற்றார். கர்நாடகாவின் கிழக்கு பெங்களூரில் உள்ள இராமமூர்த்தி நகர் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[2][3] 'கன்னட வீர சேனானி' என்றும் இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் ஏ.என்.கிருட்டிணா ராவ் மற்றும் பலர் தலைமையில் கன்னட இயக்கத்தை முன்னணியில் இருந்து இராமமூர்த்தி வழிநடத்தினார்.[4]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

1918 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி அன்று நஞ்சன்கூடில் ஒரு பிராமண குடும்பத்தில் மா இராமமூர்த்தி பிறந்தார். இவருடைய தந்தை வீரகேசரி சீதாராம சாசுத்திரி ஒரு குறிப்பிடத்தக்க சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இலக்கியவாதியாவார்.[5]

நினைவேந்தல்

[தொகு]

இவரை நினைவுகூரும் வகையில் பெங்களூரில் உள்ள ஒரு பகுதிக்கு இராமமூர்த்தி நகர் என்று பெயர் சூட்டப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]