பூரான் (பனை)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பனம் பழத்தில் சாதாரணமாக மூன்று விதைகள் இருக்கும். பனங் கொட்டை என்று சொல்லப்படும் இந்தப் பனம் விதை தகுந்த புறச் சூழற் காரணிகளால் முளை விடுவதற்குத் தயாராகும் முதற் கால கட்டங்களில், அந்த விதையினுள் இருக்கும் சத்துப் பொருளானது திடமான ஒரு பதார்த்தமாக மாறும். இந்தப் பருவத்தில் இருக்கும் பனங் கொட்டையைக் கத்தியால் இரண்டாகப் பிளந்து அதன் உள்ளிருக்கும் தவுனை(பூரானை) பெறலாம். இது வெள்ளை/மஞ்சள் நிறமாக இருக்கும். இது உண்பதற்கு மிக இனிப்பாகவும் ”பியர்சுப்” பழத்தின் கடினத்தையும் கொண்டிருக்கும்.
முளை விட எத்தனிக்குங் காலப் பகுதியில் ஏதாவது தொற்று ஏற்பட்டு விட்டாலோ, அல்லது ஏதாவது நூண்ணங்கிகள் அதை உண்ண முயன்றாலோ, தவுன்(பூரான்) பழுதடைந்து சீந்தில் என்னும் நிலைக்கு வந்து விடும். இது, கடினத் தன்மையை இழந்த தவுனாகத் திரவமாக இருக்கும். முளைத்துப் பனங் கிழங்கு வந்து விட்ட நிலையிலும், தவுன்(பூரான்) சீந்திலாக மாறி விடும்.
தவுன்(பூரான்) (அல்லது தவன்) தேங்காயினுள்ளுந் தோன்றும். தேங்காய் முளைக்கும் பருவத்தை அடையும் போது இது நடைபெறும். கிட்டத்தட்டப் பனம் தவுனும் தேங்காய்ப் தவுனும் ஒரே சுவையாகவே இருக்கும்.