உள்ளடக்கத்துக்குச் செல்

புயல் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புயல் வகைப்பாடு என்பது காற்றின் வேகத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாகும். இந்தியாவில் 5700 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது உலகில் புயல் அதிகமாக தாக்கும் ஆறு இடங்களில் இந்தியாவும் ஒன்று. வழக்கமாக மே மாதம் முதல் சூன் மற்றும் நவம்பர் மற்றும் திசம்பர் மாதம் வரை 6 முதல் 8 புயல்கள் வரை உருவகின்றன. இதில் 80% புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்குகின்றன. தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இவை அதிக பாதிப்புக்க்கு உள்ளாகின்றன. அயனமண்டல புயல் பற்றிய படிப்பிற்கு அயனமண்டல வானிலை என்று பெயர். டாப்ளர் வெதர் ராடர் முலம் புயல் வருவதை அறியலாம்.


காற்றின் வேகம் புயலின் வகைப்பாடு
31 குறைவு 17 நாட் காற்றழுத்த தாழ்வு பகுதி
31 kmph 49 17 - 27 நாட் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
50 kmph 61 28 - 33 நாட் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம்
62 kmph 88 34 - 47 நாட் புயல்
89 kmph 118 48 - 63 நாட் தீவிர புயல்
119 kmph 221 64 - 119 நாட் மிக தீவிர புயல்
221 மேல் 120 நாட் மேல் மாபெரும் புயல்

துறைமுக புயல் எச்சரிக்ககை கொடி உணர்த்தும் செய்திகள்[1][2]

குறியீடு எண் விளக்கம்
எண் 1 புயல் உருவாகும் சூழல் முன்னறிவிப்பு (பலத்த காற்று வீசலாம் ஆனால் பாதிப்பு இல்லை)
எண் 2 புயல் உருவாகியுள்ளது (துறைமுகத்தைவிட்டு கப்பல் வெளியேறவேண்டும்)
எண் 3 பலத்த காற்றோடு மழையும் பெய்யும்
எண் 4 துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து
எண் 3, 4 மோசமான வானிலை
எண் 5 புயல் உருவாகிவிட்டது புயல் இடது பக்கமாக கரையைக் கடக்கும்
எண் 6 புயலால் உருவாகிவிட்டது புயல் வலது பக்கமாக கரையைக் கடக்கும்
எண் 7 புயலால் உருவாகிவிட்டது அது துறைமுகம் வழியாகவோ அல்லது வெகு அருகாமையிலோ கரை கடக்கும்
எண் 5,6,7 துறைமுகத்துக்கு ஏற்பட்ட ஆபத்தைக் குறிக்கிறது.
எண் 8 மிகப்பெரும் ஆபத்து தீவிர அல்லது அதிதீவிர புயல் ஏற்பட்டு துறைமுகத்தின் இடது பக்கம் கரையைக் கடக்கும்
எண் 9 மிகப்பெரும் ஆபத்து தீவிர அல்லது அதிதீவிர புயல் ஏற்பட்டு துறைமுகத்தின் வலது பக்கம் கரையைக் கடக்கும்
எண் 10 அதிதீவிரப் புயலால் பெரிய அளவுக்கு ஆபத்து புயல் துறைமுகத்தை நேரடியாகவோ மிக அருகாமையிலோ தாக்கும்
எண் 11 வானிலை மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படும், மோசமான வானிலை

மேற்கோள்கள்[தொகு]

  • Disaster Management Training Module by SCERT, 2015-16 page no. 15-16, Tamil Nadu Text Book 10th (old) page no. 338
  1. "புயல் கூண்டு எண்கள் என்ன சொல்கின்றன?". கேள்வி பதில். தி இந்து தமிழ். 20 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2018.
  2. "புயல் எச்சரிக்கை சின்னங்களின் அர்த்தம் என்ன?". கட்டுரை. தி இந்து தமிழ். 12 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயல்_வகைப்பாடு&oldid=3483211" இலிருந்து மீள்விக்கப்பட்டது