உள்ளடக்கத்துக்குச் செல்

புணர்ச்சிக் குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதல் புணர்ச்சி எனப்படும். தலைவி தலைவனோடு கொண்ட மறைமுக உடலுறவைத் தோழி எவ்வாறு அறிந்துகொள்வாள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.[1]

  1. நாற்றம் - புணர்ச்சி வெளிப்பாட்டில் தோன்றும் உடல் மணத்தைத் தொல்காப்பியம் வெறி-நாற்றம் எனக் குறிப்பிடுகிறது.[2]
  2. தோற்றம் - வாரிய கூந்தல் கலைந்திருத்தல், உடல் உறவின்போது தோன்றும் வியர்வையால் பொட்டு அழிந்திருத்தல், மார்பில் தோன்றும் கீறல் குறிகள் முதலானவை தோற்ற மாறுபாடுகள்.
  3. ஒழுக்கம் - பதற்றத்தோடும், பறிகொடுத்தவள் போலவும் நடந்துகொள்ளுதல்
  4. உண்டி - உண்ண விரும்பாமை [3]
  5. செய்வினை மறைத்தல் - தன் செயல்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்தல்
  6. தனியே செல்லுதல் - தோழியுடன் சேர்ந்தே சென்றவன் தனியே செல்லல்
  7. தோழியோடு பயிலும் பாங்கு - தோழியோடு ஆடிப்பாடியும் அரவணைத்தும் நடந்துகொள்ளுதலில் மாற்றம்.

ஆகிய ஏழு வகையான நடத்தைகளால் தலைவி தலைவனோடு உடலுறவு கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்துகொள்ள முடியுமாம்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
    செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
    புணர்ச்சி வெளிப்பாடு உள்ளறுத்து வரூஉம்
    உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை - தொல்காப்பியம் களவியல் 24
  2. முறிமேனி, முத்தம் முறுவல் வெறிநாற்றம்
    வேல் உண் கண் வேய் தோள் அவட்கு - திருக்குறள்
  3. நெஞ்சத்தார் காதலவர் ஆக வெய்து உண்டல்
    அஞ்சுதும் வேபாக்(கு) அறிந்து - திருக்குறள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=புணர்ச்சிக்_குறிப்பு&oldid=2746337" இலிருந்து மீள்விக்கப்பட்டது