பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீமநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி என்பது தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாநகரின் பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகும்.

இப்பள்ளி 1925இல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டது. பின்னர் 1959 இல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 2000களின் துவக்கத்தில் 450 பேர் படித்த இந்தப் பள்ளியில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேவந்தது. 2009இல் பள்ளி மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்து, 44 பேர் மட்டுமே படிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் விடா முயற்சியால், 2017 கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை 165 ஆக உயர்ந்தது.

இந்தப் பள்ளியில் அண்மையில் இணையவழிக் கற்றல், பள்ளிக்கென தனியாக வலைப்பதிவு, மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் பள்ளி நிகழ்வுகளை பெற்றோருக்கு குறுஞ்செய்தி வழியாக தெரிவிக்கும் சேவை ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சுகாதாரம் முதல் இணையவழிக் கற்றல் வரை சாதனை: திருச்சியில் புதிய பொலிவுடன் மிளிரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி". கட்டுரை. தி இந்து. 30 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2017.