பீட்டர் ஆலன் சுவீட்
பீட்டர் ஆலன் சுவீட் Peter Alan Sweet | |
---|---|
பிறப்பு | 15 மே 1921 பெக்கன்காம், கெண்ட்டு |
இறப்பு | 16 ஜனவரி 2005 பூலே, தோர்செட் |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வானியல் கணிதவியல் |
பணியிடங்கள் | வான்கல ஆக்க அமைச்சகம் கிளாசுக்கோ பல்கலைக்கழகம் |
கல்வி | கிங்சுபரி கவுண்டி இலக்கணப் பள்ளி]] சிட்னி சுசெக்சு கல்லூரி]], கேம்பிரிட்ஜ் |
Academic advisors | பிரெடு ஆயில் |
அறியப்படுவது | சுவீட்–பார்க்கர் படிமம் எடிங்டன்–சுவீட் சுழலோட்டம் |
பீட்டர் ஆலன் சுவீட் (Peter Alan Sweet) (1921–2005) ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் 1959 முதல் தன் ஓய்வு ஆண்டான 1982 வரைகிளாசுக்கோ பல்கலைக்கழக இரேஜியசு பேராசியராக இருந்துள்ளார். இவர்1973 இல் இருந்து 1975 வரையில் அறிவியற் புலத்தலைவராக இருந்துள்ளார்.
இவரது முனைவான செய்ல்பாட்டின் கீழ், வானியல் துறை மூன்று பனியாளரில் இருந்து 17 நிலைத்த பணியாளர் வரை விரிவடைந்துள்ளது. இவர் கிளாசுக்கோவில் ஏக்கர் சாலையில் இருந்த புதிய வான்காணக் கட்டிடத்தை இதற்காக எடுத்துக் கொண்டுள்ளார். இக்கட்டிடம் 1967 இல் திறந்து வைக்கப்பட்டது. துறை அலுவலகங்கள் தலைமை வளாகத்தில் அமைந்த அப்போது தான் புதியதாக நிறுவிய பல்கலைத் தோட்டத்தின் கணிதவியல் கட்டிடத்தின் மேல்மாடிக்கு நகர்ந்தன.
இவர் கிங்சுபரி கவுண்டி இலக்கணப் பள்ளீயில் படித்தார். இவர் கேம்பிரிட்ஜ் சிட்னி சுசெக்சு கல்லரியின் கணிதவியல் உயரிய திறந்தநிலை நல்கையான 1942 ஆம் ஆண்டைய விராங்கிலர் ஆவார். இவர் 1942 இலிருந்து இரண்டாம் உலகப்போர் முடியும் வரையில் வான்கல ஆக்க அமைச்சகத்தில் இளநிலை அறிவியல் அலுவலராகப் பணிபுரிந்துள்ளார். இவர் 1947 இல் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் வானியல் விரிவுரையாளர் ஆனார். இவர் பின்னர், 1952 இல் உதவி இயக்குநராக இலண்டன் பல்கலைக்கழக வான்காணத்துக்கு நகர்ந்தார். இவர் தான் கிளாசுக்கோவில் உள்ள இரேஜியசு கட்டிலில் 1959 இல் அமரும்வரை அப்பதவில் தொடர்ந்திருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- University of Glasgow Story Peter Sweet accessed 5 March 2014
- Obituary, The Independent Newspaper Professor Peter Sweet accessed 5 March 2014