உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்ஸ் பேர்டினண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்ஸ் பேர்டினண்ட்
Archduke Franz Ferdinand of Austria
பிறப்பு(1863-12-18)திசம்பர் 18, 1863
ஆஸ்திரியப் பேரரசு
இறப்புசூன் 28, 1914(1914-06-28) (அகவை 50)
சரயேவோ, ஆஸ்திரிய-ஹங்கேரி
பட்டம்ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர், ஹங்கேரி, பொஹேமியாவின் இளவரசர்
வாழ்க்கைத்
துணை
சோஃபி

பிரான்ஸ் பேர்டினண்ட் (Franz Ferdinand; டிசம்பர் 18, 1863ஜூன் 28, 1914) ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார்[1]. ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டிருக்கையில் அங்கு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வே ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சேர்பியாவின் மீது போரை அறிவிக்க காரணம் ஆகும். இதனை அடுத்து ஆஸ்திரிய-ஹங்கேரியுடன் கூட்டணியாக இருந்த ஜெர்மனி, ஒட்டோமான் பேரரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்பியாவுடன் நட்பில் இருந்த நாடுகளுடன் (நேச நாடுகள்) போரை ஆரம்பித்தன. இது முதலாம் உலகப் போருக்கு வழி வகுத்தது[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Brook-Shepherd, Gordon(1987), "Royal Sunset", p.139
  2. Lonnie Johnson (1989). Introducing Austria: A short history. Ariadne Press, 270 Goins Court, Riverside, CA 92507. pp. pp.52-54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-929497-03-1. {{cite book}}: |pages= has extra text (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்ஸ்_பேர்டினண்ட்&oldid=2210311" இலிருந்து மீள்விக்கப்பட்டது