பிரான்சிசு கிரகாம் சுமித்
சர் பிரான்சிசு கிரகாம் சுமித் Francis Graham-Smith | |
---|---|
2009 ஆம் ஆண்டில் பிரான்சிசு கிரகாம் சுமித் | |
பிறப்பு | 25 ஏப்ரல் 1923 |
அறியப்படுவது | அரசு வானியலாளர் |
சர் பிரான்சிசு கிரகாம் சுமித் (Sir Francis Graham-Smith) (பிறப்பு: 25 ஏப்பிரல் 1923) ஒரு பிரித்தானிய வானியலாள்ர் ஆவார். இவர் 1982 முதல் 1990 வரை பதிமூன்றாம் அரசு வானியலாளராக இருந்தார். இவர் 1986 இல் மாவீரர்(நைட்) பட்டம் பெற்றார்.[1]
வாழ்க்கை
[தொகு]கல்வி
[தொகு]வாழ்க்கை==
கல்வி
[தொகு]இவர் இங்கிலாந்து, இலங்காசயரில் உள்ள உரோசால் பள்ளியில் பயின்றார்[2]. இவர் 1941 இல் இருந்து கேம்பிரிட்ஜ் டவுனிங் கல்லூரியில் பயின்றுள்ளார்.[3]
வாழ்க்கைப்பணி
[தொகு]இவர் 1940 களின் இறுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்கழகத்தில் மைக்கெல்சன் நெடுங்குறுக்கீட்டளவியில் பணிபுரிந்துள்ளார்.
இவர் 1964 இல் மான்செசுட்டர் பல்க்கலைக்கழகத்தில் கதிர்வீச்சு வானியல் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். இவர் 1981 இல் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் இருந்த யோதிரல் ஆற்றங்கரை வான்காணகத்தில் நுபீல்டு கதிர்வீச்சு ஆய்வகங்களின் இயக்குநராகப் பணிபுரிந்தார். மேலும், இவர் 1975 முதல் 1981 வரை கிரீன்விச் அரசு வான்காணக இயக்குநராகவும் இருந்தார்.
இவர் பிரித்தானிய விளையாட்டுக் காட்சி நிறுவன அன்னிகா இரைசு யோதிரல் ஆற்றங்கரைக்கு வந்தபோது செல்வ வேட்டரெனும் நான்காம் நெடுந்தொடரின் 13 ஆம் காட்சிப் பகுதியில் தோன்றியுள்ளார்.[4]
நூல்தொகை
[தொகு]- ஒளியியல் (1971)
- புடவி காணும் வழிமுறைகள் (1988)
- துடிமீன் வானியல் (1990)
- கதிர்வீச்சு வானியலுக்கான அறிமுகம் (1997)
= சொந்த வாழ்க்கை
[தொகு]இவர் தேனீ வளர்ப்பாளர் ஆவார்; இவர் யோதிரல் வங்கி தேன்கூடுகளின் காப்பில் 1990 கள் வரை ஈடுபட்டு வந்தார். இவர் புனித ஆந்திரூசு பல்கலைக்கழகத் தொடக்கநிலை தேனீ வளர்ப்புக் கழகம் உருவாக்க ஊக்கம் அளித்துள்ளார்.[5]
இவர் தன் மனைவி எலிசபெத்தோடு செசுசயர், என்பெறியில் உள்ள பழைய பள்ளி வீட்டில் 1981 முதல் தன் மனைவி இறந்த 2021 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். கதிர்வீச்சு வானியலின் தொடக்க காலத்தில் 1945-46 இல் மார்ட்டின் இரைலில் வேலை செய்தபோது இவர்கள் முதன்முதலாகச் சந்தித்தனர்.[6]
தகைமைகள்
[தொகு]இவர் 1970 இல் அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1].
இவர் 1987 இல் அரசு பதக்கத்தைப் பெற்றார்.
இவர் 1975 முதல் 1977 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார்.
இவர் 1982 முதல் 1990 வரை பதிமூன்றாம் அரசு வானியலாளராக விளங்கினார்.
இவர் 1991 இல் இரிச்சர்டு கிளேசுபுரூக் பதக்கமும் பரிசிலும் பெற்றார்
புரவலராக
[தொகு]இவர் ஐக்கிய இராச்சிய மாந்தநேயர்கள் அமைப்பின் தகவுறு புரவலரும்[7] மேன்சுபீல்டு, சுட்டன் வானியல் கழகத்தின் புரவலரும் ஆவார்.
விரிவுரைகள்
[தொகு]புடவித் தேட்டம் எனும் விரிவுரையை ஆற்ற 1965 இல் அரசு வானியல் கழகத்தால் ஒழுங்கு செய்யப்படும் கிறித்துமசு விரிவுரைகள் வரிசையில் ஒரு இணைவிரிவுரையாளராக அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Francis Graham-Smith | Royal Society". royalsociety.org (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ School, Rossall (2015-02-06). "Sir Francis Graham Smith". Rossall School. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ rp441 (2016-07-01). "Sir Francis Graham-Smith". Downing College Cambridge (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Treasure Hunt S04e13 @ Cheshire (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-07-05வார்ப்புரு:Dead Youtube links
- ↑ Neale, Angus (2018-10-11). "Waxing Lyrical". The Saint (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Lady Elizabeth Graham- Smith". www.henbury.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
- ↑ "Sir Francis Graham-Smith, FRS, FRAS, F Inst P". Humanists UK (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.