உள்ளடக்கத்துக்குச் செல்

பார்பாரா அசுகின்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்பாரா அசுகின்சு
பிறப்பு1939
பெல்ஃபாசுட், டென்னசி, அமெரிக்கா
வாழிடம்ஃஅண்ட்சுவில்லி, அலபாமா
துறைவேதியியல்
பணியிடங்கள்மார்ழ்சல் விண்வெளி பறப்பு மையம்
கல்வி கற்ற இடங்கள்அலபாமா பல்கலைக்கழகம், ஃஅண்ட்சுவில்லி
விருதுகள்1978ஆம் ஆண்டுத் தேசியப் புதுமைப்புனைவாளர்

பார்பாரா எஸ். அசுகின்சு (Barbara S. Askins) (பிறப்பு: 1939) ஓர் அமெரிக்க வேதியியலாளர். போதுமான ஒளிபடாத ஒளிப்பட எதிர்நகல்களின் உருவத்தை மேம்படுத்தும் வழிமுறையைப் புதிதாகப் புனைந்தார். இம்முறையை நாசாவும் மருத்துவத் தொழில்துறையும் பயன்கொள்கின்றன. இது அசுகின்சுக்கு 1978ஆம் ஆண்டுக்கான தேசியப் புதுமைப்புனைவு பெருமையை ஈட்டித் தந்தது.

இளம்பருவமும் கல்வியும் தொடக்கநிலை வாழ்க்கைப்பணியும்

[தொகு]

பார்பாரா அசுகின்சு (நியே சுகாட்) 1939இல் டென்னசியில் உள்ள பெல்ஃபாசுட்டில் பிறந்தார்.[1] முதலில் இவர் ஆசிரியராக இருந்து, பிறகு மகனும் மகளும் பிறந்த்தும் பள்ளியில் அறிவியல் கல்வியைத் தொடர்ந்தார். இவர் அண்ட்சுவில்லியில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளவல் பட்டமும் அறிவியல் முதுவர் பட்டமும் பெற்றார்.[1][2]

ஆராய்ச்சிப் பணி

[தொகு]

விருதுகளும் தொழில்முறை உறுப்பாண்மைகளும்

[தொகு]

புதுமைப்புனைவு, புத்தாக்க மேம்பாட்டுக் கழகம் 1978இல் அசுகின்சை அவ்வாணடின் தேசியப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்தது.[3] இவரே இத்தகைமையை முதன்முதலில் ஈட்டிய பெண்ணாவார்.[2]

அசுகின்சு அமெரிக்க வேதியியல் கழகத்திலும் சிக்மா சி தகைமை ஆய்வுக் கழகத்திலும் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்திலும் உலக வருங்காலக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Stanley, Autumn (1993). Mothers and daughters of invention: notes for a revised history of technology. New Brunswick, N.J.: Rutgers University Press. pp. 574–575. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-2197-1. {{cite book}}: |access-date= requires |url= (help)
  2. 2.0 2.1 "Barbara Askins: Inventor of a New Film Developing Method". Famous Women Inventors. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  3. "Great Images in NASA – Barbara Askins, Chemist". Great Images in NASA. NASA. Archived from the original on 23 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பாரா_அசுகின்சு&oldid=3562837" இலிருந்து மீள்விக்கப்பட்டது