பாண்டுங் புவியியல் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்கல்லின் ஒரு பகுதி. இது 2.43 கிராம் எடையுள்ளது

பாண்டுங் புவியியல் அருங்காட்சியகம் (Bandung Geological Museum) இந்தோனேசியாவில் மேற்கு ஜாவாவில் உள்ள ஒரு புவியியல் அருங்காட்சியகம் ஆகும்.

துவக்கம்[தொகு]

இந்த அருங்காட்சியகம் பாண்டுங் என்னுமிடத்தில் 10 டிசம்பர் 1871 ஆம் நாளன்று ஆறு விண்கற்கள் விழுந்த இடத்தில் திறந்து வைக்கப்பட்டதாகும். இந்த ஆறு விண்கற்களில் அரிய வகையான 11.5 கிலோ டி.கே.டபிள்யூ அடங்கும். அது பாண்டுங் புவியியல் அருங்காட்சியகத்திலும் பாரிஸ் வரலாற்று அருங்காட்சியகத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜாவா பகுதியில் பல்வேறு இடங்களில் விழுந்த 13 விண்கற்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]

வருகையாளர்கள்[தொகு]

பாண்டுங் புவியியல் அருங்காட்சியகம் பாண்டுங்கில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் கவர்ச்சிகரமான அருங்காட்சியகம் ஆகும். இங்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலோர் மாணவர்களாகவும், மாணவர்களின் குழுக்களாகவும் உள்ளனர். இந்தோனேசியா முழுவதிலும் உள்ள நகரங்களிலிருந்து பள்ளிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் அந்த மாணவர்கள் இங்குள்ளவற்றைக் காண வருகிறார்கள். பார்வையாளர்களில் சிறிய பகுதியினரே குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.[2]

வரலாறு[தொகு]

இந்த புவியியல் அருங்காட்சியகத்தின் வரலாறு 1850 ஆம் ஆண்டில் டச்சு காலனித்துவ காலத்தின்போது தொடங்கப்பட்டது ஆகும். அந்த ஆண்டில்தான் இந்தோனேசியாவில் உள்ள டச்சு அரசாங்கம் இந்தோனேசியாவில் காணப்படுகின்ற புவியியல் பொருட்கள் குறித்து ஆய்வு மற்றும் சில ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான ஒரு அமைப்பான டைன்ஸ்ட் வான் ஹெட் மிஜ்ன்வெசன் என்ற அமைப்பினை நிறுவியது. ஐரோப்பாவில் தொழில் புரட்சிக்கு ஆதரவினைத் தெரிவிப்பதற்கு அவர்களுக்கு தாதுக்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த நிறுவனம் ஏராளமான தாதுக்கள், புதை படிவங்கள், வரைபடங்கள் மற்றும் அவை போன்றவற்றை சேகரித்து வந்தபோது, ​​அவற்றை பத்திரமாகச் சேமித்து வைக்கவும், மேற்கொண்டு அவற்றை பகுப்பாய்வு செய்யவும் அந்த நிறுவனத்திற்கு ஒரு இடத்தின் தேவை அவசியமாக இருந்தது. எனவே, இந்த சூழ்நிலையில் அவர்கள் 1928 ஆம் ஆண்டில் ரெம்ப்ராண்ட் ஸ்ட்ராட் என்ற இடத்தில் ஒரு ஒரு புவியியல் ஆய்வகத்தை கட்டி முடித்தனர். துரதிர்ஷ்டவசமாக, ஜப்பான் காலனித்துவமயமாக்கல் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய போர் ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான ஆவணங்களை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இப்போது ரெம்ப்ராண்ட் ஸ்ட்ராட்டின் ஸ்டார்ட் என்ற பெயரானது டிபோனெகோரோ ஸ்டிரீட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் புவியியல் ஆய்வகத்தின் ஆர்ட் டெகோ கட்டிடம் புவியியல் அருங்காட்சியகமாக மாறியுள்ளது. இந்த அருங்காட்சியகம் அதன் தற்போதைய தோற்றத்திற்கு 1999-2000 காலப்பகுதியில் புதுப்பிக்கப்பட்டது, இதற்கு JICA (ஜப்பான் சர்வதேச கூட்டு நிறுவனம்) நிதி உதவி அளித்தது.

காட்சிப்பொருள்கள்[தொகு]

பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்தவுடன், ஒரு புளோரா யானையின் புதை படிவத்தைக் (எலிபாஸ் ஹைசுட்ரிண்டிகஸ்) காண முடியும். அது பார்வையாளர்களை வாழ்த்தி உள்ளே அழைப்பது போல உள்ளது. இது மண்டபத்தின் நடுவில் உயரமாக நின்ற நிலையில் உள்ளது. அது ஓர் ஆண் யானையுடையது ஆகும். இந்த ஆண் யானையானது 165,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, பின்னர் தன்னுடைய 49 ஆம் வயதில் இறந்தது. அந்த யானையின் புதைபடிவம் 2009 ஆம் ஆண்டில் புளோரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதை படிவத்தின் கண்டுபிடிப்பினை ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பாகக் கொள்ளலாம். ஏனெனில் அந்த யானையின் 85 விழுக்காட்டு புதை படிவங்கள் அப்படியே உள்ளன. இந்த மண்டபத்திலிருந்து அடுத்து சுற்றிப் பார்ப்பதற்கு மூன்று வகையான வாய்ப்புகள் பார்வையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன. இடது புறத்தில் இந்தோனேசியாவின் புவியியலை ஆராய முடியும். வலது புறத்தில் வாழ்க்கையின் வரலாற்றை ஆராய முடியும். அல்லது மேல் தளத்திற்குச் சென்றால் அங்கு புவியியல் வளங்கள், நன்மைகள் மற்றும் பேரழிவுகள் தொடர்பானவற்றை ஆராயலாம்.[2]

இந்தோனேசியாவின் புவியியல்[தொகு]

இந்தப் பகுதியானது புவியியல் அருங்காட்சியகத்தின் மேற்குப் பிரிவில் அமைந்துள்ளது. முதன்மை நுழைவாயிலிலிருந்து இடது புறம் சென்று இவ்விடத்தை அடையலாம். முதல் காட்சிப்பொருள் பூமியின் தோற்றம் பற்றி விவரிக்கிறது. விண்கற்களின் தொகுப்புகளை இங்கே காணலாம். மார்ச் 19, 1884 ஆம் நாளன்று இல் கிழக்கு ஜாவாவில் உள்ள மடியூனில் காணப்பட்ட ஜாடிபெங்கிலோன் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய விண்கல் ஆகும். இதன் எடை 156 கிலோ ஆகும். அசாதாரண ஜாடிபெங்கிலோன் விண்கல்லைத் தவிர இங்கு இந்தோனேசியா முழுவதிலும் இருந்து குவார்ட்ஸ், அமேதிஸ்ட் போன்ற பல வகையான தாதுக்கள் மற்றும் டயபாஸ், டையோரிட், செக்கிஸ் மைக்கா, லாவா பாசல், கிரானைட் போன்ற பாறை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வாழ்க்கையின் வரலாறு[தொகு]

அடுத்து வாழ்க்கையின் வரலாறு என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கு பல கால அளவுகளைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான புதை படிவங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிக பழமையான புதை படிவம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஸ்ட்ரோமாடோலைட் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் கேம்பிரியனுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த ட்ரைலோபிட் உள்ளது, மெசோசோய்கிலிருந்து கொணரப்பட்ட டைரனோசொரஸ் ரெக்ஸ் (டி.ரெக்ஸ்) மாதிரி மற்றும் இந்தோனேசியாவிலிருந்து வந்த யானை போன்றவை இங்கு உள்ளன.

புவியியல் வளங்கள் போன்றவை[தொகு]

மேல் தளத்தில் புவியியல் வளங்கள், மனிதகுலத்திற்கான அவற்றின் நன்மைகள் மற்றும் அவை விவேகமின்றி பயன்படுத்தப்படும்போது சந்திக்கின்ற பேரழிவுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதியானது ஆடியோ காட்சி தொழில்நுட்பத்துடன் அமைந்துள்ள நவீன காட்சிக்கூடமாகும். முதல் பதிவாக ஒரு எரிமலை உருவாகி வெடிக்கும் வரை உள்ளதை விளக்கும் ஒரு குறும்படம் உள்ளது. இத்தளத்தில் உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பல்வேறு தாதுக்களின் பல காட்சிப் பொருள்களையும் காண முடியும். அவற்றில்தங்கம் (Au), வெள்ளி (Ag), பிளாட்டினம் (Pt), தாமிரம் (Cu), தகரம் (Sn), துத்தநாகம் (Zn), இரும்பு (Fe), பளிங்கு, அயோடின் (I), கிரானைட், ஃபெல்ட்ஸ்பார் மற்றும் சல்பர் (எஸ்). இந்தோனேசியா நிக்கல் (நி), டின் (எஸ்.என்) மற்றும் மாங்கனீசு (எம்.என்) போன்றவை அடங்கும்.

படத்தொகுப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]