பள்ளிமன்னா சிவன் கோயில்
பள்ளிமன்னா சிவன் கோயில் (Pallimanna Siva Temple) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கும்பலாங்காடு என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். வடக்கஞ்சேரி கும்பலாங்காடு - காஞ்சிரக்கோடு சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை 1983 ஆம் ஆண்டு முதல் இந்த கோயிலின் சுவர்களில் உள்ள சுவரோவியங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது. [1] [2] இக்கோயிலின் முக்கிய தெய்வம் சிவபெருமான். வாழனி அணையில் இருந்து உருவாகும் ஆளூர் ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.
கோவிலின் அமைப்பு
[தொகு]சதுர வடிவில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் கேரளாவில் உள்ள பாரம்பரிய திராவிட பாணி கோயிலுக்கு எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது. கோவிலின் கூம்பு வடிவ மேற்கூரை செப்புத் தகடுகளால் மூடப்பட்டிருக்கிறது.
கோயிலின் சுவர்களில் காணப்படும் சுவரோவியங்கள்
[தொகு]கோயிலின் சுவரில் காணப்படும் சுவரோவியங்கள் கி.பி 17 - 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகிறது. சுவரோவியங்களில் சிவன் மற்றும் மோகினி, கிருதார்ஜுனேயம், மஹாலக்ஷ்மி, கிராதராக சிவன், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, சங்கர நாராயணன், கிரதார்ஜுனியம், ஜலந்தரா என்ற அரக்கனை சிவன் வெல்வது, ஸ்ரீராம பட்டாபிஷேகம், பல கண்களுடன் இந்திரன், கோபாலகிருஷ்ணர், காளியமர்தனம், கோவர்த்தனகிரியைத் தூக்கிய கிருஷ்ணர் போன்றவை அடங்கும். பழைய மலையாள எழுத்துக்களைத் தாங்கிய ஓவியமொன்றில், அதை வரைந்த கலைஞர் மற்றும் அவரது குருவின் பெயர் காணப்படுகிறது. இது ஓவியங்களின் காலத்தைப் பற்றி அறிவதற்கு உதவுகிறது.
படத்தொகுப்பு
[தொகு]-
நுழைவாயில்
-
ஆறு
-
ஊட்டுபுரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ASI Monuments in Thrissur". ASI. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
- ↑ "Pallimanna Siva Temple". Ishtadevatha. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.