பயனர்:TNSE BALAJI CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தி மண்டபம்:

சென்னை, அடையாறு , சர்தார் படேல் சாலையில் நிறுவப்பட்டுள்ள பல நினைவிடங்களில் மிகவும் புகழ்பெற்றது காந்தி மண்டபமாகும். இப்பெயர் வைக்கப்பட்டதினால் இந்த மண்டபத்தில் காந்தி அவர்களின் நினைவிட மட்டும் உள்ளதென்று நினைத்தா அது தவறாகும். இம் மண்டபத்தில் ரெட்டைமலை சீனிவாசன், காமராசர், ராஜாஜி மற்றும் மீஞ்சூர் பக்தவச்சலம் ஆகியோரின் நினைவிடத்தினை உள்ளடக்கியதாகும். தேசப்பிதா காந்திஜியின் நினைவிடம் கோபுர வடிவில் கட்டப்பட்டுள்ளதாலும், அளவில் பெரியதாய் உள்ளதாலும் காந்தி மண்டபம் என்ற பெயர் நிலைத்தோங்கியது.

சிறப்பம்சங்கள்[தொகு]

இந்நினைவிடத்தில் முதல் நினைவிடமாக கட்டப்பட்ட காந்திமண்டபத்தினை திரு.சி.கோபாலாச்சாரி அவர்களால் 1956ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 27ம் நாள் திறந்து வைக்கப்பட்டது. இதே வளாகத்தில் தான் வரலாற்று நினைவுச்சின்னம் 1876 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் இந்நினைவிடத்தில் காமராசர் நினைவிடமும் அப்போதைய பாரதப்பிரதமர் திருமதி,இந்திரா காந்தி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நினைவிடத்தின் பெயரின் முக்கியத்துவத்தினாலே , கலாச்சார ஒருமைப்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் முக்கிய இடமாக திகழ்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_BALAJI_CHN/மணல்தொட்டி&oldid=2335356" இலிருந்து மீள்விக்கப்பட்டது