உள்ளடக்கத்துக்குச் செல்

நையோபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நையோபேட்டு (Niobate) என்பது நையோபியம்(V) ஆல் உருவாக்கப்பட்ட ஓர் ஆக்சோ-அமில உப்பு ஆகும், மெட்டாநையோபேட்டு (NbO3), ஆர்த்தோநையோபேட்டு (NbO43−) என்பவை இவ்வுப்பின் பொதுவான வடிவங்களாகும். இலித்தியம் நையோபேட்டும் (LiNbO3) மற்றும் பொட்டாசியம் நையோபேட்டும் (KNbO3) பொதுவாகக் காணப்படும் நையோபேட்டுகளாகும்.

தயாரிப்பு

[தொகு]

நையோபியம் பெண்டாக்சைடுடன் தொடர்புடைய ஆக்சைடு, ஐதராக்சைடு அல்லது கார்பனேட்டுடன் வினைபுரிவதன் மூலம் நையோபேட்டைப் பெறலாம்.[1] உதாரணமாக இலித்தியம் கார்பனேட்டுடன் நையோபியம் பெண்டாக்சைடை வினைபுரியச் செய்தால் இலித்தியம் நையோபேட்டு கிடைக்கும்.:[2]

Li2CO3 + Nb2O5 → 2 LiNbO3 + CO2

கோபால்ட் மோனாக்சைடுடன் நையோபியம் பெண்டாக்சைடைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் கோபால்ட் மெட்டா நையோபேட்டு உற்பத்தியாகும்:[3]

CoO + Nb2O5 → Co(NbO3)2

இலந்தனைடு ஆக்சைடுகள் நையோபியம் பெண்டாக்சைடுடன் வினைபுரிந்து இலந்தனைடு ஆர்த்தோநையோபேட்டை உற்பத்தி செய்கின்றன.:[4]

Ln2O3 + Nb2O5 → 2 LnNbO4

மேற்கோள்கள்

[தொகு]
  1. 申泮文 等. 无机化学丛书 第八卷 钛分族 钒分族 铬分族. 科学出版社, 2011. pp 275-276
  2. 朱文祥. 无机化合物制备手册. 化学工业出版社, 2006. pp 219. 【V-69】偏铌(V)酸盐
  3. A Textbook of Inorganic Chemistry. Vol VI, Part III. Vanadium, Niobium and Tantalum. Charles Griffin & Company Ltd, 1929. pp 159. Cobalt Metaniobate
  4. Li Jian, C. M. Wayman. Monoclinic-to-Tetragonal Phase Transformation in a Ceramic Rare-Earth Orthoniobate, LaNbO4. J. Am. Ceram. Soc., 80 [3] 803–806 (1997). DOI: 10.1111/j.1151-2916.1997.tb02905.x
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபேட்டு&oldid=3761530" இலிருந்து மீள்விக்கப்பட்டது