நுண்நிலைக் கற்பித்தல்
நுண்நிலைக் கற்பித்தல் (Micro teaching) என்பது ஒரு பயிற்சி முன்னேற்றத் திட்டம் மற்றும் அல்லாது கற்பித்தல் மாதிரியும் கூட ஆகும். இப்பயிற்சியில் மாணவர்கள் தங்கள் சக உறுப்பினர்களிடையே தங்கள் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து இம்முறையை சிறப்புள்ளதாக ஆக்கிக் கொள்கிறார்கள். நுண்நிலைக் கற்பித்தல் முறையானது டிவைட் டபிள்யூ. ஆலன் என்பவரால் 1960 ஆம் ஆண்டு எல்லா நிலைகளிலும் மேம்படுத்த கல்வியில் பயிற்சி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலைக் கற்பித்தலில் ஆசிரியர் பல சிறு குழுக்களுக்கிடையே சிறிய பாடத்தினை (20 மணித்துளிகள்) தயார் செய்து வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். இந்த நுண்நிலைக் கற்பித்தலில் இப்பயிற்சி நடத்துபவர் ஒலி மற்றும் ஒளி வழி நுண்ணோக்கி வழி உற்று நோக்கி தன் கருத்தை வெளிப்படுத்தி இம்முறையில் பல மாற்றங்களை புகுத்துகிறார்.
ஜான் ஹாட்டியால் தனது காணக்கூடிய கற்றல் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொண்ட நுண் நிலைக்கற்பித்தலுக்கான சான்றுகளின் மதிப்பாய்வு, மாணவர் விளைவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு சிறந்த முறையாகக் கண்டறியப்பட்டது.[1]
நுடபங்கள்
[தொகு]அதன் தொடக்கத்திலிருந்து, 1963 ஆம் ஆண்டு, நுண்நிலைக் கற்பித்தல் நிறுவப்பட்டது ஆசிரியர் பயிற்சி வழிமுறை, பல நிலைகளிலும் ஆசிரியர் பயிற்சி பட்டறைகளிலும் பல்கலைக்கழங்களிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.பயிற்சி ஆசிரியர் தான் பயிற்சி பெறும் வல்லுநர்களிடம் அவர் நடத்தும் முறையை உற்றுநோக்கி தனது பயிற்சி முறையை ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு 5 அல்லது10 நபர்களிடம் அமைத்து கொள்கிறார். இந்நுண்ணிலைக் கற்பித்தலில் பாடப்பகுதி, திறன், ஒலி மற்றும் ஒளிப்பதிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.[2]
கருத்து
[தொகு]பின்னூட்டம் நுண்ணியக் கற்பித்தலில் கூறுவது அவ்வளவு எளிதன்று. பின்னூட்டம் மாணவர்கள் தங்கள் கற்றல் திறமையை மேம்படுத்துவதோடு நல்ல கற்பித்தல் சூழலை உருவாக்க பின்னணியாக அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Glossary of Hattie's influences on student achievement - VISIBLE LEARNING".
- ↑ Abendroth, Mark; Golzy, John B.; O'Connor, Eileen A. (1 December 2011). "Self-Created Youtube Recordings of Microteachings: Their Effects upon Candidates' Readiness for Teaching and Instructors' Assessment". Journal of Educational Technology Systems 40 (2): 141–159. doi:10.2190/ET.40.2.e. http://ets.sagepub.com/content/40/2/141.[தொடர்பிழந்த இணைப்பு]