உள்ளடக்கத்துக்குச் செல்

நாதன் அஸ்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாதன் ஜான் அஸ்லே (Nathan John Astle, MNZM (பிறப்பு: 15 செப்டம்பர் 1971) இவர் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் ,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடியுள்ளார். பொதுவாக இவர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் துவக்கவீரராகவும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் மத்திய கள வீரராகவும் களம் இறங்கினார். சுமார் 12 ஆண்டுகளாக இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். 81 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர் 4,702 ஓட்டங்களையும், 223 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய இவர் 7,090 ஓட்டங்களையும் எடுத்தார். 2013 ஆம் ஆண்டி கணக்கின் படி நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் இவர் இரண்டாம் இடம் பிடித்தார். இவர் சர்வதேச போட்டிகளில் 154 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் மித விரைவு வீச்சாளர் ஆவார்.மேலும் விரைவாக தேர்வுத் துடுப்பாட்டத்தில் இருநூறு ஓட்டங்களை அடித்தவர் மற்றும் நான்கு நாள் ஆட்டப் பகுதி கொண்ட தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அதிக ஓட்டம்ங்கள் அடித்த தனி நபர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றவர் ஆகிய சாதனைகளைப் படைத்துள்ளார்.இந்த இரு சாதனைகளும் 2002 ஆம் ஆண்டில் கிறிஸ்ட்சர்ச்சில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் நிகழ்த்தப்பட்டது ஆகும். 

சர்வதேச போட்டிகள்

[தொகு]

ஆரம்ப காலம்

[தொகு]

1995 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரின் ஒரு போட்டியில் 95 ஓட்டங்கள் எடுத்து தொடரை சமன் செய்ய உதவினார். இட்யன்மூலம் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி 13 போட்டிகளில் தோல்வி அடைந்தது முடிவிற்கு வந்தது.[1] இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதனால் இவரை ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறக்க வேண்டும் என அணியின் பயிற்சியாளர் முடிவு செய்தனர்[2] பின் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.இந்தத் தொடரின் முதல் நான்கு போட்டிகளில் குறைவான ஓட்டங்களையே எடுத்தார். பின் ஐந்தாவது போட்டியில் தனது முதல் நூறு  ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் 128 பந்துகளில் 114 ஓட்டங்களை எடுத்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகனாகத் தேர்வானார். இருந்தபோதிலும் இந்தத் தொடரை 3-2 எனும் கணக்கில் இந்தியத் துடுப்பாட்ட அணி கைப்பற்றியது.[3] இதற்கு அடுத்த வருடம் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஆமில்டனில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இவர் அறிமுகமானார்.முதல் போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். இந்தப் போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. இவர் ஆட்டநாயகனாகத் தேர்வானார். இந்தத் தொடரின் இறுதியில் 168 ஓட்டங்களை எடுத்தார். இவரின் சராசரி 56.00 ஆகும்.[4]

References

[தொகு]
  1. Menon, Mohandas. "Longest losing streaks". Rediff.com. Archived from the original on 23 September 2013. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  2. "Nathan Astle". England and Wales Cricket Board. Archived from the original on 22 September 2013. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  3. "New Zealand in India ODI Series – 5th ODI". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. Archived from the original on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 21 September 2013.
  4. "Zimbabwe in New Zealand ODI Series – 1st ODI". ESPNcricinfo. Archived from the original on 21 September 2013. பார்க்கப்பட்ட நாள் 22 September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதன்_அஸ்லே&oldid=3968803" இலிருந்து மீள்விக்கப்பட்டது